ஸ்ரீநகர்,அக்.25:கஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்த குழுவினரை சந்திக்கமாட்டோம் என ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சியின தலைவர் மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்துள்ளார்.
மத்தியஸ்தர்களிடம் எங்களுக்கு தனிப்பட்ட விரோதம் ஒன்றுமில்லை. கஷ்மீரிகளுக்கு தேவை சுயநிர்ணய உரிமையாகும். கஷ்மீர் பிரச்சனையை நீட்டிக்கொண்டு போகத்தான் மத்தியஸ்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களுடன் ஹுர்ரியத் மாநாட்டுக்கட்சி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஏன் மத்தியஸ்த குழுவை நியமிக்க வேண்டும்? இவ்வாறு மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்தார்.
அதேவேளையில் கஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு அளிக்க மீர்வாய்ஸ் பிரிவு கையெழுத்து வேட்டை துவக்கியுள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானுக்குமிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சூழலில் அமெரிக்கா கஷ்மீர் குறித்த கொள்கையை மாற்றவேண்டும் என்பது ஹுர்ரியத்தின் கோரிக்கையாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர் மத்தியஸ்த குழுவினரை சந்திக்கமாட்டோம்: மீர்வாய்ஸ் ஃபாரூக்"
கருத்துரையிடுக