28 அக்., 2010

கஷ்மீர்:மோதலில் எட்டுபேருக்கு காயம், நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு

ஸ்ரீநகர்,அக்.28:கஷ்மீரில் பாதுகாப்புப் படையினரும், போராட்டக்காரர்களும் மோதியதில் எட்டுபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்த போராட்டக்காரர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பந்திப்புராவில் போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவை புறக்கணித்து சாலையில் இறங்கி கல்வீச்சில் ஈடுபட்ட பொழுது போலீஸ் லத்திசார்ஜில் ஈடுபட்டது.

மோதலில் ஐந்து போலீசாருக்கும், 3 போராட்டக்காரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. ஸ்ரீநகர், பாராமுல்லா, குப்வாரா, பந்திப்புரா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹுர்ரியத் மிதவாத பிரிவுத் தலைவர் மீர்வாய்ஸ் ஃபாரூக் பிரிவு ஐ.நா அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தப் போவதாக அறிவித்தது. ஹுர்ரியத் கிலானி பிரிவும் இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்தது. பேரணியை தடுக்க ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் பெருமளவில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹூர்ரியத் கட்சியின் பல உறுப்பினர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

1947 ஆம் ஆண்டு கஷ்மீரில் ராணுவம் ஆக்கிரமித்த நினைவு தினத்தையொட்டி நேற்று ஹுர்ரியத்தின் இரு பிரிவும் அழைப்பு விடுத்த முழு அடைப்பினால் கஷ்மீரில் நேற்று மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்தது. நேற்று கறுப்பு தினத்தை கடைப்பிடிக்க ஹுர்ரியத் அழைப்பு விடுத்திருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:மோதலில் எட்டுபேருக்கு காயம், நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு"

கருத்துரையிடுக