18 நவ., 2010

ஹைத்தியில் காலரா மரணம் 1000 ஐ தாண்டியது

போர்ட்ஆஃப்பிரின்ஸ்,நவ.18:ஹைத்தியில் காலரா மரணம் பெருகி வருகிறது. இதுவரை காலரா நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1000 தாண்டிவிட்டது.

டொமினிக்கன் குடியரசு நாட்டிலும் நோய் பரவியுள்ளதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருவருக்கு காலரா பாதித்தது உறுதிச் செய்யப்பட்டதால் டொமினிக்கன் குடியரசின் ஹைத்தி எல்லையில் பரிசோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயால் பீடிக்கப்பட்ட 16,800 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா சமாதானப் படையில் அங்கம் வகிக்கும் நேபாள் ராணுவத்தினரால்தான் காலரா நோய் பரவியதாக ஊகங்கள் ஹைத்தியில் நிலவுகின்றன.

நேற்று முன்தினம் கேம்ப் ஹைத்தியில் கண்டனப் போராட்டங்கள் நடைப்பெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டோர் ஐ.நா மையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். போராட்டத்தின் போது ஐ.நா சமாதானப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணித்தார். போலீஸ் நிலையம் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் ஹைத்தியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,30,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துயரத்திலிருந்து மீளும் முன்பே இன்னொரு துயர நிகழ்வு ஹைத்தியை பாதித்துள்ளது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹைத்தியில் காலரா மரணம் 1000 ஐ தாண்டியது"

கருத்துரையிடுக