இஸ்லாமாபாத்,நவ.2:வடமேற்கு பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு வஸீரிஸ்தானின் ஹைதர்கேல் என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மேல் பகுதி மீது ஆளில்லா விமானத்திலிருந்து புறப்பட்ட ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. இதில் கொல்லப்பட்டவர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லை.
போராளிகளை தாக்குகிறோம் என்ற போர்வையில் சி.ஐ.ஏவின் கட்டுப்பாட்டிலிலுள்ள ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) நடத்தும் தாக்குதலில் வழக்கமாக கொல்லப்படுவது அப்பாவி மக்களாவர்.
கடந்த வாரம் இதே பகுதியில் நடந்த தாக்குதலில் 20பேர் கொல்லப்பட்டிருந்தனர். 2010 ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய 70க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களில் மட்டும் 200 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
அதேவேளையில் நேட்டோ ட்ரக்குகளின் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். நவ்ஷிரா மாவட்டத்தில் பப்பி நகரத்தில் இரண்டு எண்ணை டாங்கர்களை தடுத்து நிறுத்தி போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு ஓட்டுநர்களுக்கும், ஒரு உதவியாளருக்கும் காயமேற்பட்டது.
ஆப்கானிஸ்தானிற்கு எரிபொருளைக் கொண்டுசெல்லும் டாங்கர்கள் மீது தாக்குதல் நடப்பது வழக்கமான ஒன்றாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல் - ஐந்துபேர் மரணம்"
கருத்துரையிடுக