27 நவ., 2010

ஃபலஸ்தீன்:யெர்ஸா கிராமத்தில் மஸ்ஜிதை இடித்துத் தள்ளிய இஸ்ரேல்

ராமல்லா,நவ.27:ஃபலஸ்தீன் மேற்குகரையில் யெர்ஸா கிராமத்தில் அமைந்திருந்த மஸ்ஜித் ஒன்றை இஸ்ரேலிய ராணுவம் இடித்து தள்ளியது.

ராணுவ புல்டோஸரை பயன்படுத்தி மஸ்ஜிதையும் இதர 10 கட்டிடங்களையும் ராணுவம் இடித்துத் தள்ளியது. இக்கட்டிடங்களும், மஸ்ஜிதும் ராணுவ பிராந்தியத்தில் கட்டப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

மிகவும் பழமையான மஸ்ஜிதையும், அதனுடன் இணைந்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தையும் இடித்து தள்ளிய இஸ்ரேலிய ராணுவம் அத்துடன் ஆடுகளை வளர்ப்பதற்காக பயன்படுத்திய 10 இதர கட்டிடங்களையும் இடித்துத் தள்ளியுள்ளது.

ராணுவ பிராந்தியத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட 10 கட்டிடங்களை இடித்துள்ளதாக இஸ்ரேலிய உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

இஸ்ரேலின் பூரண கட்டுப்பாட்டிலிலுள்ள மேற்குகரையின் சி பிராந்தியத்தில் அமைந்துள்ளது யெர்ஸா கிராமம். இங்கு எதனை கட்டவேண்டுமானாலும் இஸ்ரேலின் அனுமதியை பெறவேண்டும். கட்டிட நிர்மாணத்திற்கான 95 சதவீத மனுக்களையும் நிராகரிப்பதுதான் இஸ்ரேலின் வழக்கம்.

இதற்கிடையே மேற்குகரையில் யத்தா கிராமத்தில் 18 பேர் வசிக்கும் வீடு ஒன்றை இஸ்ரேல் ராணுவம் இடித்துத் தள்ளியுள்ளது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன்:யெர்ஸா கிராமத்தில் மஸ்ஜிதை இடித்துத் தள்ளிய இஸ்ரேல்"

கருத்துரையிடுக