12 நவ., 2010

புஷ்ஷை விசாரணைச் செய்யவேண்டும்: ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்

லண்டன்,நவ.12:சிறைக்கைதிகளை சித்திரவதைச் செய்ய அனுமதி வழங்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்ஷை விசாரணை செய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் வேளையில் வாட்டர் போர்டிங் என்றழைக்கப்படும் தண்ணீரில் முகத்தை கட்டி ஆழ்த்தி மூச்சுமுட்டச் செய்யும் சித்திரவதைச் செய்தலுக்கு அனுமதியளித்ததாக ஜார்ஜ் w புஷ் சமீபத்தில் வெளியிட்ட டிவிசன் பாயிண்ட் என்ற நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு பிறகு ஆறு தினங்கள் கழித்து அமெரிக்காவிற்கு வெளியே சி.ஐ.ஏ ரகசிய சிறைக் கொட்டடிகளை நிர்மாணித்தது.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் சி.ஐ.ஏ சிறைக் கைதிகளுக்கெதிராக மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்துவிட்டதாக ஆம்னஸ்டி குற்றஞ்சாட்டுகிறது. கடந்த மாதம் எட்டாம் தேதி ஒரு நேர்முகத்தில் ஜார்ஜ் w புஷ் இதனை ஒப்புக்கொண்டிருந்தார்.

சித்திரவதைக்கெதிரான ஐ.நா கன்வென்சனின் தீர்மானத்தின் படி புஷ்ஷையும், அவரது கூட்டாளிகளையும் விசாரணைச்செய்ய வேண்டுமென ஆம்னஸ்டி கோரியுள்ளது. புஷ்ஷே இதனை ஒப்புக்கொண்டதால் சர்வதேசச் சட்டத்தின்படி விசாரணை மேற்கொள்ள இயலும் என ஆம்னஸ்டி விளக்கமளித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புஷ்ஷை விசாரணைச் செய்யவேண்டும்: ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்"

கருத்துரையிடுக