காஸ்ஸா,நவ.16:மேற்குகரையில் 3 மாதங்களுக்கு குடியேற்ற நிர்மாணங்களை நிறுத்திவைத்தால், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது உள்ளிட்ட ஆதரவை தெரிவித்துள்ள அமெரிக்காவின் நடவடிக்கையை ஃபலஸ்தீன் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இச்செய்தி உண்மையானால், அமெரிக்காவின் நடவடிக்கையை ஃபலஸ்தீனர்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என மஹ்மூத் அப்பாஸின் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் அமீன் மக்பூல் தெரிவித்துள்ளார்.
இச்செயல் சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர உதவாது. இஸ்ரேல் தாக்குதல் வாசனைக் கொண்ட ஒரு நாடு.ஆதலால், அவர்கள் அமெரிக்காவின் உதவியை தவறாக பயன்படுத்துவார்கள்.
அமெரிக்காவின் உத்தரவை இஸ்ரேல் அமைச்சரவையிடம் சமர்ப்பித்துள்ளதாக ஏற்கனவே இஸ்ரேலிய ரேடியோ செய்தி வெளியிட்டிருந்தது. மூன்று மாதத்திற்கு குடியேற்ற நிர்மாணத்தை இஸ்ரேல் நிறுத்திவைத்தால், கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய போர் விமானங்களை தரலாம் எனவும், குடியேற்ற நிர்மாணத்தை நிறுத்திவைக்க மீண்டும் கோரமாட்டோம் என அமெரிக்கா வாக்குறுதியளித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குடியேற்றம்:இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்காவுக்கு எதிராக ஃபலஸ்தீன"
கருத்துரையிடுக