27 நவ., 2010

சொஹ்ரபுதீன் வழக்கு:சி.பி.ஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது

புதுடெல்லி,நவ.27:சொஹ்ரபுதீன் ஷேக்கை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த வழக்கின் இறுதி அறிக்கையை சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

முத்திரை வைக்கப்பட்டுள்ள கவரில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் நகலை குஜராத் அரசுக்கும், குற்றஞ்சாட்டப்பட்டோருக்கும் வழங்க உச்சநீதிமன்ற நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ஆர்.எம்.லோடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. அடுத்த மாதம் 14-ஆம் தேதி சி.பி.ஐ அளித்த அறிக்கை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வரும்.

முன்னாள் குஜராத் பா.ஜ.க அமைச்சர் அமீத் ஷாவின் ஜாமீனை ரத்துச்செய்யக் கோரும் சி.பி.ஐ யின் மனுவும் அன்றைய தினமே பரிசீலிக்கப்படும். ஷாவுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கேள்வி எழுப்பி சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்திருந்தது. டிசம்பர் 14 ஆம் தேதிவரை ஷா குஜராத்தில் வசிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஷாவின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக இருந்தது. ஆனால், ஷாவின் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தனிப்பட்ட காரணங்களால் இன்று ஆஜராகவில்லை.

முதல்வர் மோடியை கொல்ல திட்டமிட்டார் எனக் குற்றஞ்சாட்டி கடந்த 2005 நவம்பரில் சொஹ்ரபுதீன் ஷேக்கை குஜராத் போலீசார் போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்தனர். இவரின் மனைவி கெளஸர்பீயையும், இவ்வழக்கின் நேரில் கண்ட சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் போலீசாரால் கொல்லப்பட்டிருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சொஹ்ரபுதீன் வழக்கு:சி.பி.ஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது"

கருத்துரையிடுக