28 நவ., 2010

ஆதர்ஷ் சொசைட்டி ஊழல்: முக்கிய ஆவணங்கள் மாயம்

மும்பை,நவ.28:ஆதர்ஷ் ஹவுசிங் சொசைட்டி தொடர்பான கோப்பில் முக்கிய பக்கங்கள் காணாமல் போயுள்ளன. இதுக் குறித்து போலீசார் வழக்கு பதிவுச்செய்து விசாரித்து வருகின்றனர்.

கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்குவதற்காக ஆதர்ஷ் ஹவுசிங் சொசைட்டி சார்பாக 31 அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் பல ஊழல்கள் நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. ராணுவ அதிகாரிகளுக்கும், மஹாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் மற்றும் அவரது உறவினர்களுக்கும் இக்குடியிருப்பில் ப்ளாட்டுகள் வழங்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து அசோக் சவான் ராஜினாமாச் செய்திருந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்குத் தொடர்பாக மாநில அரசிடமிருந்து ஆவணங்களை வாங்கி சி.பி.ஐ ஆய்வு செய்தபோது ஒரு கோப்பில் 4 முக்கிய ஆவணங்கள் காணாமல் போனது தெரியவந்தது. அந்தகோப்பில் 15,27,99 மற்றும் 279 ஆகிய பக்கங்கள் அகற்றப்பட்டு இருந்தன.

கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அன்றைய முதல்வர் அசோக் சவானுக்கும், மாநில அரசின் மூத்த அதிகாரிகளுக்குமிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

முக்கியமான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து சி.பி.ஐ உடனடியாக மாநில நகர்புற வளர்ச்சி இலாகாவுக்கு தெரிவித்தது. இதையடுத்து அந்த இலாகாவின் செயலாளர் குருதாஸ் பாஜ்பே, மெரைன் ட்ரைவ் போலீஸ் நிலையத்தில் இதுக்குறித்து புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்கைப் பதிவுச்செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். மாநில நகர்புற வளர்ச்சி இலாகா அதிகாரிகளிடம் இதுத் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதர்ஷ் சொசைட்டியில் ஊழல்கள் நடந்து இருப்பதால், அந்த கட்டிடத்தில் குடிபுகுவதற்கான சான்றிதழை மும்பை மாநகர வளர்ச்சி ஆணையம் ஏற்கனவே ரத்து செய்து இருக்கிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆதர்ஷ் சொசைட்டி ஊழல்: முக்கிய ஆவணங்கள் மாயம்"

கருத்துரையிடுக