29 நவ., 2010

தம்மாமில் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபோரம் நடத்திய ஈத் மிலன் நிகழ்ச்சி

தம்மாம்,நவ,29:இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் தம்மாம் தமிழ் பிரிவு பெருநாளை கொண்டாடும் விதமாகவும் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் வகையிலும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருகின்றது. இந்த வருடமும் தம்மாமில் உள்ள நாதா கிளப்பில் இந்த நிகழ்ச்சி நவம்பர் 26, 2010அன்று நடத்தப்பட்டது.

காதர் அலி அவர்கள் இறைமறையின் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்சியை தொகுத்து வழங்கிய மக்தூம் நைனா அவர்கள், இத்தகைய நிகழ்ச்சிகள் இஸ்லாத்தை குறித்த தவறான கருத்துக்களை களைய உதவுவதுடன் பல்வேறு மதங்களையும் கொள்கைகளையும் பின்பற்றும் மக்கள் மத்தியில் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் தம்மாம் தமிழ் பிரிவின் தலைவர் முஹம்மது பைசல் அவர்கள் ஃபோரம் ஆற்றி வரும் பணிகளை விவரித்தார். சாதி, மதம், மொழி, பிராந்தியம் என அனைத்து தடைகளையும் கடந்து இந்தியர்கள் அனைவருக்கும் ஃபிரடர்னிட்டி ஃபோரம் பணியாற்றி வருவதை சம்பவங்களின் துணையுடன் விளக்கினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தம்மாம் முத்தமிழ் மன்றத்தின் செயலாளர் திரு.சிவகுமார் அவர்கள் இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரத்தின் பணிகளை மனமாற வாழ்த்தினார். 'எனது பார்வையில் இஸ்லாம்' என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளான தொழுகை, ஜக்காத், நோன்பு ஆகியவை தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார். இஸ்லாத்தில் ஜாதி வேறுபாடு இல்லை என்பதையும் இஸ்லாம் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

ரியாஸ் அஹமது அவர்கள் 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இஸ்லாத்தின் கடவுள் கொள்கை, தூதர்களின் பணி மற்றும் மறுமை நாளின் அவசியம் குறித்து தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து இஸ்லாம் குறித்த மாற்று மதத்தவர்களின் கேள்விகளுக்கு முஹம்மது ஃபைஸல் மற்றும் ரியாஸ் அஹமது ஆகியோர் பதில் அளித்தனர்.

இஸ்லாமிய கொள்கைள், தீவிரவாதம், பாபரி மஸ்ஜித் விவகாரம் என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கங்கள் தெளிவாக வழங்கப்பட்டன.


மாற்று மதத்தவர்களுக்கு குர்ஆன், இஸ்லாம் குறித்த புத்தகங்கள் மற்றும் சி.டி.கள் இலவசமாக வழங்கப்பட்டன.

வருகைதந்த அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிழ்கழ்ச்சியில் நூறு மாற்று மத அன்பர்கள் உள்ளிட்ட இருநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தம்மாமில் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபோரம் நடத்திய ஈத் மிலன் நிகழ்ச்சி"

கருத்துரையிடுக