14 நவ., 2010

இறுதியில் அவர்கள் மக்களின் முன்னால் சரணடைய நேர்ந்தது

தென்னாப்பிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா போல அடக்குமுறைக்கு எதிரான அமைதியான போராட்டத்தின் சின்னம்தான் மியான்மரின் ஆங்சான் சூகி.

ராணுவஆட்சி நடைபெறும் மியான்மரில் ஜனநாயகத்தை திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சியின் காரணமாக கடந்த 20 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலும் கழித்தவர் அவர்.

சூகியின் கட்சியான நேசனல் லீக் ஃபார் டெமோக்ரெஸி தேர்தலில் கம்பீரமான வெற்றியைப் பெற்ற அடுத்த ஆண்டில் அதாவது 1991 ஆம் ஆண்டில் சூகியை நோக்கி சமாதானத்திற்கான நோபல் பரிசு தேடிவந்தது.

சக்தியில்லாதவர்களின் சக்திக்கு அழகான உதாரணம்தான் ஆங்சான் சூகி என அன்றைய நோபல் கமிட்டியின் தலைவர் பிரான்சிஸ் ஸைஜஸ்டட் புகழாரம் சூட்டினார்.

பிரிட்டீஷாருக்கெதிரான மியான்மர் மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் ஹீரோ என கருதப்படும் ஜெனரல் ஆங்சானின் மகள்தான் சூகி.

சுதந்திரம் கிடைப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு 1947 ஆம் ஆண்டு ஜூலையில் ஆங்சான் கொல்லப்பட்டார். 1960 ஆம் ஆண்டு இந்தியாவில் மியான்மரின் தூதராக நியமிக்கப்பட்ட சூகியின் தாயார் டாக்டர் கின் கீயுடன் டெல்லிக்கு வந்தார் சூகி. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சூகி பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சூகி தத்துவமும், அரசியல் தந்திரம் மற்றும் பொருளாதார தத்துவங்களையும் பயின்றார். அங்கே வைத்துத்தான் சூகி அவருடைய எதிர்கால கணவர் மைக்கேல் ஆரிஸிற்கு அறிமுகமானார்.

சிறிதுகாலம் ஜப்பான் மற்றும் பூட்டான் நாடுகளில் தனது வாழ்க்கையை கழித்த பின்னர் வீட்டு பெண்மணியாக மாறிய சூகி அலெக்சாண்டர் மற்றும் கிம்மின் தாயாரானார்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாருக்கு பணிவிடைச் செய்வதற்காக 1988 ஆம் ஆண்டில் சூகி ரங்கூனுக்கு வருகைத் தந்தார். அப்பொழுது மியான்மரில் அரசியல் சிக்கலுக்குள்ளாகியிருந்தது.

ஜனநாயக சீர்திருத்தம் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்களும், தொழிலாளர்களும், சன்னியாசிகளும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

1988 ஆம் ஆண்டு ரங்கூனில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சூகி, எனது தந்தையின் மகள் என்ற நிலையில் இந்த போராட்டத்திலிருந்து விலகியிருக்க என்னால் முடியாது என அறிவித்தார். அன்றைய சர்வாதிகாரி ஜெனரல் நேவிற்கெதிரான புரட்சியின் மூக்கணாங்கயிறு சூகியின் கரங்களுக்கு வந்துசேர அதிக காலம் தாமதிக்கவில்லை.

அமெரிக்க மக்கள் உரிமைத் தலைவரான மார்டின் லூதர்கிங் மற்றும் இந்தியாவின் தேசத்தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்ட முறைகளை உட்கொண்ட சூகி நாடு முழுவதும் பயணம் செய்து மக்களை ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு தயார்படுத்தியதோடு சுதந்திரமான தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால், 1988 செப்டம்பர் 18 ஆம் தேதி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் போராட்டங்களை கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கியது.

சூகியை வீட்டுக்காவலில் வைத்து அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடைச்செய்த பொழுதிலும் சூகியின் கட்சியான என்.எல்.டி 1990 மேமாதம் நடந்த தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றது. ஆனால், அதிகாரத்தை ஒப்படைக்க மறுத்த ராணுவம் இன்றுவரை ஆட்சியை தொடர்கிறது.

1995 ஆம் ஆண்டு ஜூலையில் சூகி விடுதலைச் செய்யப்படும் வரை ஆறுவருடங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பயணத் தடையை மீறியதாக குற்றஞ்ச்சாட்டி மீண்டும் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார் சூகி.

2002 மே மாதம் விடுதலைச் செய்யப்பட்டாலும், ஒரு வருடம் முடிவடைவதற்கு முன்பே சூகியும் அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் அரசை ஆதரிக்கும் மக்களுக்கிடையே நடந்த மோதலைக் காரணம் காட்டி மீண்டும் அவரை சிறையிலடைத்தனர். பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் சூகி.

சிறை வைக்கப்பட்ட காலங்களில் சூகி ஆய்விலும்,சங்கீதத்திலும் கழித்தார். துவக்க காலங்களில் சூகிக்கு தனது கணவரையோ,பிள்ளைகளையோ பார்க்க முடியாத அளவிற்கு தனிமைச் சிறைவாசமாகும்.

1999 இல் அவருடைய கணவர் புற்றுநோயால் இறந்துவிட்டார். தனது பேரக்குழந்தையை இதுவரை ஒருமுறைக் கூட சூகி நேரில் கண்டதில்லை. சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலங்களிலெல்லாம் சூகி, தான் சாதாரண மியான்மர் மக்களின் பிரதிநிதி என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

"ஆட்சியாளர்களின் சக்தி எவ்வளவு ஆனாலும் இறுதியில் அவர்களால் மக்களுக்கு தடைப்போட முடியாது. சுதந்திரத்தையும்." - என 2007 ஆம் ஆண்டு அவர் அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இறுதியில் அவர்கள் மக்களின் முன்னால் சரணடைய நேர்ந்தது"

கருத்துரையிடுக