புதுடெல்லி,நவ.30:இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை 2ஜி ஸ்பெக்ட்ரம் அனுமதியைக் குறித்து பேச பெரும் வர்த்தக முதலைகளுக்கு இடைத்தரகராக செயல்பட்ட நிரா ராடியாவுடன் ஊடக-வர்த்தக பிரமுகர்கள் நடத்திய உரையாடல்கள் பதிந்த டேப் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து மத்திய இண்டலிஜன்ஸ் பீரோவும், மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையமும் இணைந்து விசாரணை நடத்தும். ராடியா பல்வேறு தலைவர்கள், வர்த்தக அதிபர்களுடன் பேசியதன் தொலைபேசி பேச்சுக்களை வருமான வரித்துறை தனது விசாரணைக்காக ஒட்டுக் கேட்டு பதிவு செய்தது.
ஆனால் இதில் கிட்டத்தட்ட 100 பேச்சுக்கள் அடங்கிய ஆடியோ டேப்கள் பத்திரிகைகளுக்கு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதை எதிர்த்து ரத்தன் டாடா இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது விசாரணைக்கு மத்திய அரசு அவசரம் அவசரமாக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளைக் குறித்து சி.பி.ஐ விசாரித்துவரும் சி.பி.ஐ ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உரையாடல்களை பரிசோதித்து வருகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "நிரா ராடியாவின் உரையாடல் டேப் குறித்து விசாரணை"
கருத்துரையிடுக