30 நவ., 2010

அமெரிக்காவில் மஸ்ஜிதிற்கு தீவைப்பு

வாஷிங்டன்,நவ.30:மேற்கு அமெரிக்காவிலுள்ள மாநிலமான ஓரிகோனில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கோல்வாலிஸில் ஸல்மானுல் ஃபாரிஸி என்ற மஸ்ஜிதுடன் கூடிய இஸ்லாமிய மையத்திற்கு தீவைத்துக் கொளுத்தினர். இதில் எவருக்கும் காயமேற்படவில்லை.

கிறிஸ்துமஸ் விளக்கு ஏற்றும் கொண்டாட்டத்தின் போது குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டார் எனக் குற்றஞ்சாட்டி நேற்று முன்தினம் எஃப்.பி.ஐ கைதுச் செய்த சோமாலியா வம்சாவழியைச் சார்ந்த முஹம்மது உஸ்மான் மஹ்மூத் வழக்கமாக தொழுகைக்குச் செல்லும் மஸ்ஜிதிற்குதான் தீவைக்கப்பட்டது.

மதியம் 2 மணிக்கு கொளுந்துவிட்டு எரிந்த தீயை 10 நிமிடத்திற்குள் அணைத்தனர். மஹ்மூத் குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டார் என்பதற்காக மஸ்ஜிதை தாக்குவதற்கான முயற்சியை அனுமதிக்கமாட்டோம் என போலீஸ் அறிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்காவில் மஸ்ஜிதிற்கு தீவைப்பு"

கருத்துரையிடுக