27 நவ., 2010

நடராஜனாக ஒபாமா:ஹிந்துக்கள் எதிர்ப்பு

வாஷிங்டன்,நவ.27:ஹிந்துக்கள் தெய்வமாக கருதும் நடராஜனுக்கு(சிவன்) துல்லியமான முறையில் வரையப்பட்ட ஒபாமாவின் ஓவியத்தை வெளியிட்ட நியூஸ் வீக் மாத இதழுக்கு சர்வதேச ஹிந்துக்கள் கண்டன்ம் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட இப்பத்திரிகையின் அட்டைப் படத்தில் ஹிந்துக்கள் தெய்வங்களாக கருதும் சிவனின் நடராஜ வேடத்திற்கு துல்லியமான ஒபாமாவின் ஓவியம் வெளியிடப்பட்டிருந்தது.

'காட் ஆஃப் ஆல்திங்ஸ்' என்ற வாசகத்துடன் இந்த ஓவியம் வெளியிடப்பட்டிருந்தது. ஹிந்துத்துவத்தை அவமானப்படுத்தும் இந்த சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கவேண்டும் என த மலேசியா என்ற ஹிந்து அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஹிந்து பிம்பங்களையும், சின்னங்களையும் வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துவதை ஹிந்து அமெரிக்கன் பவுண்டேசனின் சட்ட ஆலோசகர் சுஹாஹ் சுக்லா விமர்சித்துள்ளார்.

அமெரிக்க மாத இதழ் நடராஜ பாவனையை துச்சமாக கருதியதாக யூனிவெர்சல் சொசைட்டி ஆஃப் ஹிந்துயிஷம் தலைவர் ராஜன் செட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நியூஸ் வீக் பத்திரிகை தனது இணையதளத்தில் இதனைக் குறித்து உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டுமெனவும், அடுத்த இதழில் சிவனைக் குறித்தும், சிவனின் நடராஜ பாவனையைக் குறித்தும், ஹிந்து மதத்தைக் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நடராஜனாக ஒபாமா:ஹிந்துக்கள் எதிர்ப்பு"

கருத்துரையிடுக