1 நவ., 2010

ஒபாமா வருகை:இடதுசாரிகள் போராட்டம்

புதுடெல்லி,நவ.1:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வருவதையொட்டி நவம்பர் 8ம் தேதி இடதுசாரி கட்சிகள் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஒபாமா அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற பொழுது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பு இருந்தபொழுதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைத்தல், தொழிற்சாலையில் சுற்றுப் புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள டோ நிறுவனத்திற்கு உத்தரவிடுதல், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் நிர்பந்தத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கையை நிறுத்துதல், இந்தியாவை அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாக மாற்றும் இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களை வாபஸ் பெறுதல், அணு விபத்து ஏற்பட்டால் அமெரிக்க நிறுவனங்கள் தப்பிக்கும் விதமான அணு விபத்து இழப்பீடு மசோதாவில் மாற்றம் கொண்டுவருவதற்கான அழுத்தத்தை நிறுத்துதல், ஈராக்கிலிருந்து மீதமுள்ள ராணுவத்தினரை வாபஸ் பெறுதல், ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ ராணுவத்தினரை வாபஸ் பெறுதல், கியூபாவிற்கெதிரான கடல் போக்குவரத்து தடையை வாபஸ் பெறுதல், ஃபலஸ்தீனில் ஆக்கிரமிப்புச் செய்துவரும் இஸ்ரேலுக்கு அளித்துவரும் உதவியை நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இப்போராட்டத்தின் கோஷங்களாகும்.

நவம்பர் 8ம் தேதி உள்ளூர் மட்டத்திலிருந்து எல்லா இடங்களிலும் பேரணியும் தர்ணாவும் நடைபெறும் என இடதுசாரி தலைவர்களான பிரகாஷ் காரட், எ.பி.பரதன், தேபபிரதா விஸ்வாஸ், அம்பனி ராய் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒபாமா வருகை:இடதுசாரிகள் போராட்டம்"

கருத்துரையிடுக