14 டிச., 2010

விக்கிலீக்ஸின் இந்தோனேசிய பதிப்பிற்கு பெரும் வரவேற்பு

ஜகார்த்தா,டிச.14:விக்கிலீக்ஸின் இந்தோனேசிய பதிப்பிற்கு பெரும் வரவேற்பு அந்நாட்டில் கிடைத்துள்ளது. இணையதளம் துவங்கி இரண்டு தினங்களுக்குள் லட்சத்திற்கும் அதிகமான தரவிறக்கங்கள்(Download) நடந்துள்ளது.

நான்கு ஆவணங்கள் தற்பொழுது விக்கிலீக்ஸின் இந்தோனேஷிய பதிப்பான இந்தோலீக்ஸில் வெளியாகியுள்ளது.

மனித உரிமை ஆர்வலரான முனீரின் மரணத்தைக் குறித்து மீண்டும் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்பதை முதல் ஆவணம் தெரிவிக்கிறது. ரகசிய ஏஜன்சிகள் இதில் குற்றக்காரர்கள் என தெளிவான பிறகும் ரகசிய ஏஜன்சியின் தலைவரை ஒரு முறை கூட விசாரணைச் செய்யாததை இதில் சுட்டிக்காட்டப்படுகிறது.

அடுத்த ஆவணம் லும்பூர் ஸிதாவார்ஜோ எரிமலை குமுறுவதைக் குறித்ததாகும். மூன்றாவது ஆவணம் இந்தோனேஷியாவில் செயல்பட்ட ஒரு புரட்சி கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் குறித்து அன்றைய இந்தோனேஷிய அதிபர் சுகோர்த்தாவும், முன்னாள் அமெரிக்க அதிபர் நிகஸனும் அவருடைய ஆலோசகர் கிஸ்ஸிங்கரும் நடத்திய பேச்சுவார்த்தையின் விளக்கங்கள் அடங்கியுள்ளன.

நான்காவதாக இந்தோனேஷிய அரசுக்கும்,மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திற்குமிடையேயான ஒப்பந்தத்தைக் குறித்து பேசுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸின் இந்தோனேசிய பதிப்பிற்கு பெரும் வரவேற்பு"

கருத்துரையிடுக