20 டிச., 2010

ஆஃப்கானில் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல்: 13 பேர் மரணம்

காபூல்,டிச.20:ஆஃப்கானில் இரண்டு நகரங்களில் ராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 5 பேரும் மோதலில் மரணமடைந்தனர்.

வடக்கு நகரமான குண்டூசில் ராணுவத்தினரை தேர்வுச் செய்யும் முகாம் மீது போராளிகள் தாக்குதலை தொடுத்தனர். இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடந்தது.

காபூலுக்கு அருகே நாட்டின் முக்கிய ராணுவ வீரர்களை தேர்வுச் செய்யும் மையத்தின் வெளியே ராணுவ பேருந்தின் மீது இரண்டாவது தாக்குதல் நடந்தது .தாக்குதலின் பொறுப்பை தாலிபான் ஏற்றுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு படையில் எவரும் சேரக்கூடாது என்பதற்காகத்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

குண்டூசில் ராணுவ வீரர்களின் வேடத்தில் வந்த 4 பேர் தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதல் நடக்கும்பொழுது நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்வு மையத்தின் உள்ளே இருந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து ஆஃப்கான் மற்றும் அந்நிய நாட்டு படையினர் ராணுவ மையத்தை சுற்றிவளைத்தனர். ஐந்து ஆப்கன் ராணுவத்தினரும், 3 போலீசாரும், 3 போராளிகளும் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெர்வித்தார்.

காபூலில் ராணுவத்தினர் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது போராளிகள் தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடியாக செக்போஸ்ட் பாதுகாப்பு படை வீரர் திருப்பி சுட்டதில் ஒருவர் கொல்லப்படார். இதனைத் தொடர்ந்து இன்னொரு போராளி நடத்திய குண்டுவெடிப்பில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். குண்டூசில் போலீஸ் தலைமை அதிகாரியின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு அருகே ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. ஏராளமான செக்போஸ்ட்டுகளை கடந்து வந்து போராளிகள் எவ்வாறு தாக்குதலை நடத்தினர் என்பது அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஜெர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் நேற்று முன் தினம் குண்டூசில் ராணுவத்தினரை சந்தித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃப்கானில் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல்: 13 பேர் மரணம்"

கருத்துரையிடுக