டாக்கா,டிச.20:டாக்காவிலிருந்து 240 கி.மீ தொலைவிலிலுள்ள அலிபூரில் சுர்மா நதியில் சரக்குக் கப்பலுடன் மோதியதில் படகு மூழ்கி 37 பேர் மரணமடைந்தனர். 20 பேரை காணவில்லை.
100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த இப்படகில் பெரும்பாலோன்ர் தொழிலாளிகளாவர். மரணித்தவர்களில் பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளுமாவர். ஆண்கள் படகின் மேல் பகுதியிலிருந்து பயணம் செய்ததால் விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக நதியில் குதித்து நீந்தி உயிர் தப்பினர். பெண்களும்,குழந்தைகளும் படகின் உள்பகுதியில் இருந்ததால் அவர்களால் தப்பிக்க இயலவில்லை. என சுனாம்கஞ்ச் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவிக்கிறார். காணாமல் போனவர்களை தேடுதல் தொடர்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பங்களாதேஷில் படகு மூழ்கி 37 பேர் மரணம்"
கருத்துரையிடுக