18 டிச., 2010

விக்கிலீக்ஸ்:கஷ்மீர் சிறைகளில் கொடூர சித்திரவதைகள் சர்வசாதாரணம்

புதுடெல்லி,டிச.18:ஜம்மு கஷ்மீர் சிறைகளில் கொடூரமான சித்திரவதைகள் நடப்பதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்பான செஞ்சிலுவைச் சங்கம் அமெரிக்க தூதருக்கு அளித்த அறிக்கையில் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என விக்கிலீக்ஸ் கூறுகிறது.

இந்திய பாதுகாப்பு படையினர் கஷ்மீர் சிறைகளில் கைதிகளை சித்திரவதைச் செய்வது வழக்கமான ஒன்றாகும். 2002-04 ஆண்டுகளில் 1491 சிறைக்கைதிகளுடன் பேட்டி எடுத்து செஞ்சிலுவை சங்கம் அறிக்கையை தயார் செய்துள்ளது.

ஜம்முகஷ்மீர் சிறைகளில் 177 தடவை சென்றுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தினர் 1296 சிறைக் கைதிகளை ரகசியமாக பேட்டி எடுத்துள்ளனர். சில கைதிகளுடன் பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மின்சார அதிர்ச்சி அளித்தல், பாலியல் ரீதியான சித்திரவதை, தண்ணீரில் முகத்தை ஆழ்த்தி சித்திரவதைச் செய்தல், உருட்டுதல் உள்ளிட்ட கடுமையான சித்திரவதைகள் கஷ்மீர் சிறைக்கைதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

சிறைக் கைதிகளை தரையில் உட்காரவைத்து தொடை பகுதியில் லத்தியை வைத்து உருட்டுவதும், தசைகளை கிழிப்பதற்கு ராணுவத்தினர் லத்தியின் மீது ஏறி உட்காருவர்.

சித்திரவதைக்கு ஆளான 852 சிறைக்கைதிகளின் விபரங்களை செஞ்சிலுவை சங்கத்தினர் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தனர். இந்தியாவின் சித்திரவதைக்குள்ளாவோர் தீவிரவாதிகள் அல்ல, மாறாக அப்பாவி மக்கள்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் முன்னிலையில் கூட இந்த சித்திரவதைகள் அரங்கேறியுள்ளன. இவ்விவகாரத்தை கடந்த 10 ஆண்டுகளாக செஞ்சிலுவை சங்கத்தினர் அரசுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:கஷ்மீர் சிறைகளில் கொடூர சித்திரவதைகள் சர்வசாதாரணம்"

கருத்துரையிடுக