23 டிச., 2010

சதாம் ஹுசைனின் இரத்தத்தால் எழுதப்பட்ட திருக்குர்ஆன் பிரதி

லண்டன்,டிச.23:அமெரிக்க ஆட்சியாளர்களால் தூக்கிலேற்றப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் இரத்தத்தால் எழுதப்பட்ட வார்த்தைகளடங்கிய திருக்குர்ஆன் பிரதி பாக்தாதில் ஒரு மஸ்ஜிதில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1990 ஆம் ஆண்டின் இறுதியில் சதாமிடமிருந்து ஒரு நர்ஸ் திருக்குர்ஆன் பிரதியை எழுதுவதற்கு தேவையான இரத்தத்தை சேகரிக்கத் துவங்கியுள்ளார். இரண்டுகளாக சேகரிக்கப்பட்ட 27 லிட்டர் ரத்தத்தை பயன்படுத்தி திருக்குர்ஆனி வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இதனை பிரிட்டனில் த கார்டியன் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக பாக்தாதில் ஒரு மஸ்ஜிதில் பூமிக்கு அடிப்பகுதியில் உள்ள அறையில் இந்த திருக்குர்ஆனின் பிரதி பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இங்கு பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன் லட்சக்கணக்கான டாலர் மதிப்புடையதாகும். ஆனால், சதாம் ஹுசைன் செய்தது தவறானதாகும். இரத்தத்தால் எழுதுவது ஹராமாகும். அதாவது விலக்கப்பட்டதாகும்-என ஈராக்கில் சன்னி முஸ்லிம் அறிஞரான ஷேக் அஹ்மத் அல்ஸமராயி தெரிவிக்கிறார்.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு 2003 ஆம் ஆண்டில் சதாமின் இரத்தத்தால் எழுதப்பட்ட திருக்குர்ஆனின் பிரதியின் தாள்களில் சில எனது வீட்டிலும், மீதமுள்ளவை எனது உறவினர்களின் வீட்டிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கு பின்னர் பெரியதொரு விலை மதிப்பிடப்படும் என்பதால் பாதுகாப்பாக வைத்திருந்தோம். ஆனால், இன்று அதனை காணமுடியாது. ஏனெனில் அந்த திருக்குர்ஆன் பிரதி பாக்தாதில் ஒரு மஸ்ஜிதின் பூமிக்கு அடியிலுள்ள பூட்டப்பட்ட அறையில் கடந்த 3 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அறைக்கு 3 சாவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று என் வசமும், இன்னொன்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் வசமும், 3-வது சாவி பாக்தாதில் இன்னொரு பகுதியிலும் உள்ளது. இவ்வாறு ஷேக் அல் ஸமராயி தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு சதாம் ஹுசைன் புஷ்ஷின் அமெரிக்க ஏகாதிபத்திய அரசால் தூக்கிலிடப்பட்டு மரணமடைந்தார். இதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு சதாம் ஹுசைன் தொடர்புடைய அனைத்து பொருட்களையும் அழித்தொழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சதாம் ஆட்சியின்போது நிர்மாணித்த அனைத்தையும் அழிக்க உத்தரவிடவில்லை என ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகியின் செய்தித் தொடர்பாளர் அல் அல் மூஸவி தெரிவிக்கிறார்.

இரத்தத்தால் எழுதப்பட்ட திருக்குர்ஆன் பிரதி சதாமின் கொடூரத்திற்கு அடையாளமாக பாதுகாப்போம் என மூஸவி தெரிவிக்கிறார். காரணம் சொல்ல முடியாதவற்றை சதாம் செய்திருக்கிறார். இந்த திருக்குர்ஆன் பிரதியை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாப்பதற்கு திட்டமில்லை. காரணம் ஒரு ஈராக்கியும் அதனை காண்பதற்கு விரும்பமாட்டார் என மூஸவி மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சதாம் ஹுசைனின் இரத்தத்தால் எழுதப்பட்ட திருக்குர்ஆன் பிரதி"

கருத்துரையிடுக