1 டிச., 2010

இடஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - இமாம்ஸ் கவுன்சில் மாநாடு

புதுடெல்லி,டிச.1:மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும்,கல்வி ஸ்தாபனங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என டெல்லியில் நடந்த ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா முழுவதுமிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:
*எல்லா மாநிலங்களிலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும்.

*இடஒதுக்கீடு என்ற நியாயமான உரிமையை பெறும்வரை ஜனநாயக ரீதியிலான போராட்டம் தொடரும்.

*மிஷ்ரா மற்றும் சச்சார் கமிஷன்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறியது,இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மிஷ்ரா கமிஷன் அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொழுதும் எவ்வித தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் அம்மாநாட்டில் பாப்ரி மஸ்ஜித், 1992 முதல் நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புகள், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு, வக்ஃப் சொத்துக்களின் பாதுகாப்பு ஆகியனத் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டை முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் மவ்லானா செய்யத் முஹம்மது வலி ரஹ்மானி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்ணாண்டஸ், இமாம்ஸ் கவுன்சில் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், மில்லி கவுன்சில் துணைத் தலைவர் மவ்லானா யாஸின் உஸ்மானி, எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் இ.அபூபக்கர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், மில்லிகெஸ்ஸட் ஆசிரியர் டாக்டர்.ஸஃபருல் இஸ்லாம் கான், இஸ்ஹர் மஸர்ரத் யஸ்தானி, ஹாஃபிஸ் அஸ்ரார் ஃபலாஹி உள்ளிட்ட தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

இமாம்ஸ் கவுன்சிலின் இணையதளத்தை மவ்லானா தவ்ஃஹீர் ரஸாகான் துவக்கி வைத்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இடஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - இமாம்ஸ் கவுன்சில் மாநாடு"

கருத்துரையிடுக