டெல்லி,டிச:சொராஹ்புதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கின் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கில் முன்னாள் குஜராத் அமைச்சர் அமீத் ஷாவுக்கு உள்ள தொடர்புகளை அறிய அவரிடம் விசாரணை நடத்த அனுமதி தருமாறு உச்சநீதிமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளது சிபிஐ.
சொராஹ்புதீன் படுகொலையை நேரில் பார்த்தவர் இந்த பிரஜாபதி. பின்னர் இவரும் மர்மமான முறையில் இறந்தார். இவரையும் போலி என்கவுண்டர் மூலம் கொன்றதாக பின்னர் தெரிய வந்தது.
சொராஹ்புதீன் வழக்கைப் போலவே, பிரஜாபதி கொலை வழக்கிலும் அமீத் ஷாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என சிபிஐ கருதுகிறது.
இதையடுத்து பிரஜாபதி கொலை வழக்கில் அமீத் ஷாவை விசாரிக்க அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது சிபிஐ. தற்போது ஜாமீ்னில் வெளியே வந்துள்ளார் அமீத் ஷா என்பது நினைவிருக்கலாம்.
செய்தி:தட்ஸ்தமிழ்

0 கருத்துகள்: on "சொராஹ்புதீன் வழக்கின் சாட்சி பிரஜாபதி கொலை - அமீத் ஷாவை விசாரிக்க சிபிஐ முடிவு"
கருத்துரையிடுக