26 டிச., 2010

அத்வானியுடன் நீரா ராடியாவுக்கு தொடர்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி,டிச,26:காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக் சிங்வி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது பா.ஜ.க. தலைவர் அத்வானிக்கும் தரகர் நீரா ராடியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார்.

நீரா ராடியா நடத்தும் அறக்கட்டளைக்கு டெல்லி வசந்த்கஞ்ச் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் அத்வானி கலந்து கொண்டார். அப்போது நீரா ராடியாவை அத்வானி பாராட்டினார் என்றும் அபிசேக் சிங்வி குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில்தான் சுவிஸ் வங்கியில் ராடியா கணக்கு தொடங்கினார். அவருக்கு அந்த அனுமதியை கொடுத்தது ஏன் என்றும் அபிசேக் சிங்வி கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில், சுவிஸ் வங்கி கணக்கில் நீரா ராடியா மட்டும்தான் பணம் போட்டுள்ளாரா? அல்லது அவருடன் சேர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் பணம் போட்டுள்ளார்களா? இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

பாஜக மறுப்பு
இந்த நிலையில் அத்வானிக்கும், நீரா ராடியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் தகவல்களை பா.ஜ.க. மறுத்துள்ளது. நீரா ராடியா கலந்து கொண்ட எந்த விழாவிலும் அத்வானி கலந்து கொண்டதில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நீரா ராடியாவை அத்வானி ஒருபோதும் சந்தித்ததே இல்லை என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அத்வானியுடன் நீரா ராடியாவுக்கு தொடர்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு"

கருத்துரையிடுக