12 டிச., 2010

விக்கிலீக்ஸ்:துருக்கியை ஐரோப்பிய யூனியனில் சேர்க்கக்கூடாது - போப்

வாஷிங்டன்,டிச.12:துருக்கி ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக சேருவதற்கு தடை ஏற்பட்டதற்கு காரணம் போப்பாண்டவர் என அமெரிக்காவின் வெளியுறவு ஆவணம் தெரிவிக்கிறது.

ஒரு முஸ்லிம் நாடு ஐரோப்பியனின் உறுப்பு நாடாக மாறுவதற்கு 2004-இல் 16-வது போப் பெனடிக்ட் கர்தினால் ரெஸ்டிங்கர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், இதனைக் குறித்து வாடிகன் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லை எனவும், இந்தக் கருத்து ரெஸ்டிங்கரின் சொந்தக் கருத்தாகும் என வாடிகன் ஆக்டிங் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவை கிறிஸ்தவ சாம்ராஜ்ஜியமாக மாற்றுவதற்கு நடந்த முயற்சிகளுக்கு பின்னணியில் ரெஸ்டிங்கர் செயல்பட்டுள்ளார் என ரோமில் அமெரிக்க தூதரகத்தின் ஆவணம் கூறுகிறது.

ஐரோப்பிய யூனியனில் துருக்கி இணைந்தால் தங்களின் கிறிஸ்தவ மயமாக்கல் நடவடிக்கைகள் தகர்ந்துபோகும் என ரெஸ்டிங்கருக்கு தெரியும் என அமெரிக்க பிரதிநிதி கூறுகிறார்.

துருக்கியின் உறுப்புநாடு ஆகுவதற்கான முயற்சியில் அங்காராவுக்கும், ரோமிற்குமிடையே அமெரிக்கா விளையாடியுள்ளதாக 2006 ஆம் ஆண்டு ஆவணம் தெரிவிக்கிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு தடை ஏற்படுவதால் வெனிசுலா நாட்டின் அதிபர் சாவேஸை ரகசியமாக அழிப்பதற்கு அமெரிக்காவிடம் வாடிகன் கோரிக்கை விடுத்துள்ளது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் காணப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:துருக்கியை ஐரோப்பிய யூனியனில் சேர்க்கக்கூடாது - போப்"

கருத்துரையிடுக