31 டிச., 2010

சென்னை எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.கவினர்

சென்னை,டிச.31:திருவொற்றியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சுவர் விளம்பரம் செய்துக் கொண்டிருந்த எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தி.மு.கவைச் சார்ந்த ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வருகிற பிப்ரவரி மாதம் சென்னையில் எஸ்.டி.பி.ஐயின் மண்டல மாநாடு நடைபெற உள்ளதையொட்டி எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் சுவர் விளம்பரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் சுவர் விளம்பரத்தில் ஈடுபட்டிருந்த எஸ்.டி.பி.ஐ உறுப்பினர் விநோத்தை தி.மு.கவினர் தாக்கியுள்ளனர். இதில் விநோத் காயமடைந்துள்ளார்.

இதற்கு முன்னர் தி.மு.கவினர் அம்லு கோவிந்தராஜன் என்ற பெண்மணியின் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இச்செய்தியை கேள்விப்பட்டதும் சென்னை வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரஷீத் மற்றும் அமீர் தலைமையில் எண்ணூர் சாத்தங்காடு போலீஸ் ஸ்டேசனை நோக்கி படையெடுத்தனர்.

போலீசார் குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்ய மறுக்கவே இவர்கள் இரவு 1.30 மணிவரை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ தொண்டர்களின் தொடர் வற்புறுத்தலுக்கிணங்க போலீசார் தி.மு.கவினர் மீது வழக்குப் பதிவுச் செய்தனர்.
செய்தி:newfrontworld


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சென்னை எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.கவினர்"

கருத்துரையிடுக