புதுடெல்லி,டிச.29:டாக்டர் பினாயக் சென்னிற்கு ராய்ப்பூர் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாராளுமன்றத் தாக்குதலில் அப்ஸல் குருவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சமமாகும்.
பினாயக் சென் தேசத்துடன் போர் புரிந்தார் என்ற குற்றச்சாட்டும், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டும் அரசு தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ராய்ப்பூர் விசாரணை நீதிமன்ற நீதிபதி மாவோயிஸ்டுகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க சென்னிற்கு கருணை காண்பிக்க தேவையில்லை என தீர்ப்பளித்துள்ளது.
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்ஸல் குருவுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பரிசோதித்த டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அப்ஸல் குருவுக்கு எதிரான ஆதாரங்களும், சாட்சிகளும் போலீசாரால் ஜோடிக்கப்பட்டவை எனக் கண்டறிந்திருந்தது.
ஆனால், பொதுமக்களின் மனசாட்சியை அடிப்படையாக வைத்து அவருக்கு மரணத் தண்டனையை உறுதிச்செய்தது குறிப்பிடத்தக்கது.
பினாயக் சென் தேசத்திற்கு எதிராக போர் செய்தார் என அறிவித்த அரசு தரப்பின் வாதத்திற்கு ஆதாரமில்லை எனக்கூறிய ராய்ப்பூர் கூடுதல் செசன்ஸ் நீதிபதி பி.பி.வர்மா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுகிறார்.
மாவோயிஸ்டுகளுடன் சென்னிற்கு தொடர்பிருப்பது நிரூபிக்கப்படவில்லை. பினாயக் சென் சட்ட விரோதமாக கூட்டம் கூட்டியதாகவோ, மாவோயிஸ்டுகளின் கூட்டத்தில் பங்கேற்றதாகவோ நிரூபிக்கப்படவில்லை. ஆனால், துணை ராணுவப் படையினர், போலீசார், ஆதிவாசிகள் ஆகியோரை மாவோயிஸ்டுகள் கொலைச் செய்ததோடு, தேசத்தில் தாக்குதல்களை நடத்திவரும் சூழலில் பினாயக் சென்னிற்கு கருணை காண்பிக்க தேவையில்லை என பி.பி.வர்மா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
பினாயக் சென் ஏதேனும் பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதையோ, பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினர் என்பதையோ நிரூபிக்க அரசுதரப்பு தோல்வியடைந்துவிட்டது எனக்கூறிய நீதிபதி, மாவோயிஸ்டுகளின் கொடூரத் தாக்குதல்கள் நடைபெறும் சூழலில் பினாயக் சென்னிற்கு தண்டனை விதிப்பது தவிர்க்க முடியாதது என தெரிவித்தார்.
அரசுக்கெதிராக அதிருப்தியும், வெறுப்பும் வளர்த்துவதற்கான முயற்சிகளை சென் மேற்கொண்டதாக அவரை தண்டிப்பதற்கு காரணமாக நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது.
சிகிட்சைத் தொடர்பாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் மாவோயிஸ்ட்டுகளின் சித்தாந்தகுரு நாராயண் சன்யால் சென்னிற்கு அனுப்பிய கடிதம்தான் அரசுதரப்பின் ஆதாரம். 97 சாட்சிகளையும் இதனடிப்படையில் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொழுதிலும் இவற்றையெல்லாம் நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மாவோயிஸ்டுகளுக்கு பாடம் கற்பிக்க பினாயக் சென்னிற்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்"
கருத்துரையிடுக