புதுடெல்லி,டிச.10:2001 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடுத் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் தொலைத்தொடர்புக் கொள்கைகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு ஒரு நபர் குழு விசாரணைய நடத்த உத்தரவிட்டுள்ளது.
இவ்விசாரணையை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் நடத்துவார்.
நான்கு வாரங்களில் இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்துள்ளார். அனைத்து ஆவணங்களையும் பரிசோதிக்க எந்த அதிகாரியையும் அழைத்து ஆதாரங்களை சேகரிக்க இக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடுத் தொடர்பான நடவடிக்கைகளின் உண்மை நிலையை பரிசோதிக்கும் விசாரணைக் குழுவின் விசாரணையின் எல்லை விசாலமானது.
விசாரணைக்குழு பரிசீலிக்க வேண்டியவைக் குறித்து விரைவில் இறுதி படிவம் தயாராகும். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை மேற்கொண்டது தொடர் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதா?, இதுத்தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை அமைச்சகமும், மத்திய அரசும் அளித்த உத்தரவுகள், முறைக்கேடு நடந்திருந்தால் அதன் பரவல் எவ்வளவு?, யார் இதில் குற்றவாளிகள்? உள்ளிட்ட அனைத்துக் காரியங்களையும் விசாரணைக்குழு பரிசோதிக்கும் என கபில்சிபல் தெரிவித்தார்.
2001 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வந்த தொலைத் தொடர்புக் கொள்கைகளைக் குறித்து விசாரிக்க சி.பி.ஐயிடம் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஸ்பெக்ட்ரம்:ஓய்வுபபெற்ற நீதிபதி விசாரணை நடத்துவார் - மத்திய அரசு"
கருத்துரையிடுக