போஸ்டன்,டிச.1:பிரபல வரலாற்றாய்வாளரும், அறிஞருமான இந்தியாவைச் சார்ந்த டாக்டர்.உமர் காலிதி அமெரிக்காவில் போஸ்டனில் நடந்த விபத்து ஒன்றில் மரணமடைந்தார். ஹைதராபாத்தில் பிறந்த உமர் காலிதி மாஸேசூட்ஸ் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் விரிவுரையாளராக பணியாற்றியவராவார்.
இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் கல்வி பயின்றவர் உமர் காலிதி. ஹாட்வார்டு பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்டன்சன் ஸ்டடீசிலிருந்து எம்.எல்.எம் பட்டம் பெற்ற உமர் காலிதி பிரிட்டனில் வெயில்ஸ் லம்பீட்டர் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர்(பி.ஹெச்.டி) பட்டம் பெற்றார்.
காக்கியும்,வகுப்புக் கலவரமும் இந்தியாவில், வகுப்புக் கலவரத்தில் ஆயுதப்படை, போலீஸ், துணை ராணுவப்படை என்ற விரிவான ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட (Khaki and Ethnic Violence in India) நூலிற்கு சொந்தக்காரர் உமர்காலிதி ஆவார். கடந்த ஆண்டு இப்புத்தகத்தின் மறுபதிப்பு வெளியிடப்பட்டது.
இந்திய பொருளாதார சூழலில் முஸ்லிம்கள், சுதந்திரத்திற்கு பிறகு இந்திய முஸ்லிம்கள், ஹைதரபாத்:பதட்டத்திற்கு பிறகு ஆகியன இவருடைய இதர பிரபல நூல்களாகும்.
பிரபல பத்திரிகைகள், வார இதழ்கள், இணையதளங்களில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். twocircles.net என்ற இணையதளம் 'Person of the year-2010' என்ற வாக்கெடுப்பில் வேட்பாளர்களாக முன்மொழியப்பட்ட பிரபல நபர்களில் உமர் காலிதியும் ஒருவர்.
சுதந்திர அறிவுஜீவியான உமர் காலிதியின் ஆய்வுகள் அரசியல், சமூக அறிவியல், மதவாத பிரிவுகளின் பொருளாதார உயர்ச்சியும், வீழ்ச்சியும், இஸ்லாமிய வாஸ்து சிற்பக்கலை ஆகியவற்றை சுற்றி அமைந்திருந்தன. இஸ்லாமிய வாஸ்து சிற்பக்கலையைக் குறித்து அவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இந்தியாவில் முஸ்லிம்களின் நீதிக்காக வேண்டி அர்ப்பணிக்கப்பட்டதாக இருந்தது உமர் காலிதியின் வாழ்க்கை.அரபு மற்றும் இஸ்லாமிய இலக்கியங்களில் இடம் பெற்றவர் உமர் காலிதியின் தந்தை பேராசிரியர் அப்துன்னாஸர் காலிதி.
உமர் காலிதிக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.இந்திய வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்க முஸ்லிம்களின் கூட்டமைப்பு உமர் காலிதியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பிரபல வரலாற்றாய்வாளர் டாக்டர் உமர் காலிதி விபத்தில் மரணம்"
கருத்துரையிடுக