15 டிச., 2010

வி.பி.சிங்கை நினைவுக்கூறும் வேளையில்...

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரத்தில் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையின் மூலம் நாடறிந்த தலைவராக மாறிய வி.பி.சிங்கின் இரண்டாவது நினைவு தினம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி கடந்து சென்றது.

இந்த நினைவு நாளில் இந்தியாவில் எவ்வித சலனமும் ஏற்படாதது இந்த தேசத்தின் மீது அக்கறை செலுத்துவோரை நிராசையில் ஆழ்த்தியது.

வி.பி.சிங்கின் நினைவு தினத்திற்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.மின்னணு மீடியாக்கள் உள்ளிட்ட ஊடகத்துறைக்கு அவருடைய நினைவலைகளை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதில் எவ்வித விருப்பமுமில்லை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லைதான்.

இந்திய திருநாடு உயர்த்திப்பிடித்த உன்னத கொள்கைகளையெல்லாம் கசாப்பு செய்வதற்கு ஆர்வம் காண்பித்த முன்னாள் பிரதமர்களின் பிறப்பு, இறப்பு தினங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மேல்தட்டு பத்திரிகை உலகம் மேல்ஜாதி அதிகாரவர்க்கத்தை நோக்கி வாளை நீட்டிய வி.பி.சிங் வெறுப்பிற்குரிய தலைவராக மாறியது எதிர்பார்த்த ஒன்றுதான்.

ஆனால், அவர் வளர்த்துவிட்ட அரசியல் இயக்கத்தின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் கூட அவரைக் குறித்து நினைவுக் கூறாததுதான் துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும்.

பிரதமர் பதவியை இழந்த பிறகும் நோயால் பாதிக்கப்பட்ட வி.பி.சிங் கடைசி நிமிடம் வரை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடினார். வெறும் 11 மாத பதவிக் காலத்தில் புரட்சிகரமான முடிவுகளை மேற்கொண்டவர் வி.பி.சிங்.

எனது தோழர்கள் என வி.பி.சிங்கால் சுட்டிக்காட்டப்பட்ட சிறுபான்மை மக்களும், சோசிலிச சிந்தனையாளர்களும், இடதுசாரிகளும் இணைந்து மாற்று அரசியலை உருவாக்குவதுதான் வி.பி.சிங்கிற்கு நாம் காட்டும் மரியாதையாகும்.

தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வி.பி.சிங்கை நினைவுக்கூறும் வேளையில்..."

கருத்துரையிடுக