6 டிச., 2010

கத்தரில் உலகக்கோப்பை கால்பந்து: ஒபாமாவின் அறிக்கைக்கு எதிராக டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி

தோஹா,டிச.6:2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடாக கத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை நடத்தும் நாடுகளுக்கிடையேயான போட்டியில் அமெரிக்காவை பின் தள்ளிவிட்டு கத்தர் தேர்வுச் செய்யப்பட்டது தவறான தீர்மானம் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஒபாமாவின் இக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகளாவிய அளவில் பிரசித்திப்பெற்ற மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'ஒபாமாவின் அறிக்கை எல்லா காரியங்களிலும் குத்தகையை தாங்கள்தான் எடுக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் கொள்கைக்கு கிடைத்த பலன் தான் இது.

கால்பந்தில் எனக்கு விருப்பமொன்றுமில்லை. அதுமட்டுமல்ல, கால்பந்து போட்டிக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற அபிப்ராயமும் எனக்கு உண்டு. உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறும் இடத்தை தேர்வுச்செய்யும் வாக்கெடுப்பில் ஒபாமா தலையிட்டதைத்தான் அவருடைய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.' இவ்வாறு டாக்டர்.கர்தாவி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கத்தரில் உலகக்கோப்பை கால்பந்து: ஒபாமாவின் அறிக்கைக்கு எதிராக டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி"

கருத்துரையிடுக