29 டிச., 2010

கேரள பாப்புலர் ஃப்ரண்ட் தலைவராக மெளலவி அஷ்ரஃப் தேர்வு

கோழிக்கோடு,டிச.29:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்௦ இந்தியாவின் கேரள மாநிலத் தலைவராக கரமனை அஷ்ரஃப் மெளலவி தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

மலப்புறம் மாவட்டத்தில் நடைப்பெற்ற மாநில பொதுக்குழுவில் தேர்தல் நடைப்பெற்றது. இத்தேர்தலில் மெளலவி அஷ்ரஃப் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருவனந்தபுரம் மாவட்டம் பூந்துறையைச் சார்ந்த அஷ்ரஃப் மெளலவி கேரள மாநில துணைத் தலைவராக பணியாற்றியவர்.

வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவில் பாகவி பட்டம் பெற்றவர் இவர். இதர நிர்வாகிகளாக கெ.ஹெச்.நாஸர்(துணைத்தலைவர்), பி.அப்துல்ஹமீத்(பொதுச்செயலாளர்), டி.கெ.அப்துஸ்ஸமத்(செயலாளர்), சி.எ.ஹாரிஸ்(பொருளாளர்) ஆகியோர் தேர்வுச் செய்யப்பட்டனர். வி.பி.நஸ்ருத்தீன் தலைமை வகித்தார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொருளாளர் வழக்கறிஞர் கெ.வி.முஹம்மது ஷெரீஃப் தேர்தலை நடத்தினார். தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் இறுதியுரை நிகழ்த்தினார். பொதுச்செயலாளர் பி.அப்துல்ஹமீத் அறிக்கையை சமர்ப்பித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "கேரள பாப்புலர் ஃப்ரண்ட் தலைவராக மெளலவி அஷ்ரஃப் தேர்வு"

பெயரில்லா சொன்னது…

அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவானாக!

கருத்துரையிடுக