சென்னை,டிச.16:இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை(2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக தி.மு.கவுடன் இணைந்து பணியாற்றும் மையங்களில் சி.பி.ஐ ரெய்டு நடத்துவதால் காங்கிரசுடனான தி.மு.கவின் உறவை பாதிக்காது என எம்.பியும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
ரெய்டுகள் நடத்துவது ஊழலிருந்து தி.மு.க பரிசுத்தமானது என்பதை நிரூபிக்கத்தான் என கனிமொழி மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழ்நாட்டிலும், புதுடெல்லியிலும் சி.பி.ஐ தீவிர ரெய்டை மேற்கொண்டது. கனிமொழி இயக்குநர் போர்டு உறுப்பினராக செயல்படும் என்.ஜி.ஓ அமைப்பின் தலைமையிடம் உள்ளிட்ட மையங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் தி.மு.க அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இதுபோல், மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு தி.மு.கவின் 16 எம்.பிக்களின் ஆதரவும் தொடர்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சி.பி.ஐ ரெய்டு:காங்கிரஸ்-தி.மு.க உறவை பாதிக்காது - கனிமொழி"
கருத்துரையிடுக