4 டிச., 2010

அமெரிக்க-இஸ்ரேல் உறவை வெளிக்கொணர விக்கிலீக்ஸ் தயாராகவேண்டும் - அரபுநாட்டு மக்கள்

தோஹா,டிச.4:இஸ்ரேலின் நிர்பந்தங்களுக்கு அமெரிக்கா அடிபணிவதைக் குறித்த விபரங்களை வெளியிட்டால் மட்டுமே விக்கிலீக்ஸின் நம்பகத் தன்மையை உறுதிச்செய்ய இயலும் என அரபு நாட்டுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அத்தகையதொரு அதிர்ச்சி தகவலுக்காக தாங்கள் காத்திருப்பதாக அரபு நாட்டு மக்கள் தெரிவிப்பதாக பெனின்சூலா செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் தவறான வெளியுறவுக் கொள்கைகளை விக்கிலீக்ஸ் வெளிக்கொணருகிறது என்றால் டெல்அவீவிற்கும் வாஷிங்டன்னிற்கும் இடையே பரிமாறப்பட்ட ஆவணங்களை வெளியிட அவர்கள் தயாராக வேண்டும்.

அமெரிக்க அதிகாரிகள் அல்லது இஸ்ரேலின் மறைமுக உதவி விக்கிலீக்ஸிற்கு கிடைப்பதாக வளைகுடா நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

காஸ்ஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் மனிதத் தன்மைக்கு மாற்றமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா அளித்துவரும் தார்மீக ஆதரவு தொடர்பான அல்லது வருடந்தோறும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளித்துவரும் ராணுவ மற்றும் பொருளாதார உதவித்தொடர்புடையதான ஒரு ஆவணத்தையும் விக்கிலீக்ஸ் இதுவரை வெளியிடவில்லை.

சில வறுமையில் சிக்கி தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்கா நடத்திவரும் மனித உரிமை மீறல்களைக் குறித்தும் விக்கிலீக்ஸ் இதுவரை எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை.

கடைசியாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் ஈரானையும், வளைகுடா நாடுகளையும் குறிவைக்கிறது. அந்தநாடுகளுக்கிடையேயான உறவில் வேட்டு வைக்கிறது.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் ஆவணங்களைக் குறித்து கருத்துத் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என எடுத்துரைக்கின்றனர் அரபு நாட்டு மக்கள்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க-இஸ்ரேல் உறவை வெளிக்கொணர விக்கிலீக்ஸ் தயாராகவேண்டும் - அரபுநாட்டு மக்கள்"

கருத்துரையிடுக