ஜன.31:வருகிற 2030-ம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டின் முஸ்லிம் மக்கள்தொகை 82 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
'ஃப்யூ ஃபாரம் ஆன் ரிலிஜியன் அண்ட் பப்ளிக் லைஃப்' என்ற அமைப்பு சர்வதேச அளவில் முஸ்லிம் மக்கள் தொகையை குறித்த ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்விற்கு 'தி ஃப்யூச்சர் ஆஃப் க்ளோபல் முஸ்லிம் பாப்புலேஷன்' என்றுபெயர். இவ்வாய்வில் ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை அடுத்த இருபது ஆண்டுகளில் அதாவது 2030 ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை தற்போதைய பத்து லட்சத்திலிருந்து பத்தொன்பது லட்சமாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகரிப்பதற்கு ஆய்வாளர்கள் கூறும் முதல் காரணம் என்னவெனில், பிற நாடுகளிலிருந்து ஸ்பெயினுக்கு வரும் முஸ்லிம்கள் எண்ணிக்கையாகும்.
இரண்டாவதாக ஸ்பெயினில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகும்.
கடந்த 7 ஆண்டுகளில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இக்கால அளவில் 20 ஆயிரம் பேர் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக மாறியுள்ளனர்.
ஸ்பெயினில் முஸ்லிம் ஜனத்தொகையின் அடுத்த இருபது வருடங்களுக்கான வருடாந்திர வளர்ச்சி சதவீதம் 1.5 ஆகும். ஆனால், இதர மதத்தவர்களின் வளர்ச்சி சதவீதம் 0.7 ஆகும். இந்த ஆய்வினைக் குறித்து கருத்துத் தெரிவித்த இஸ்லாமிய ஆய்வுத்துறை வல்லுநர் அப்துல் அஸீஸ் ஆயதி ப்ரஸ் டி.விக்கு அளித்த பேட்டியில், "இது நல்லதொரு செய்தியாகும். எங்கள் குரலை அனைவரும் கேட்க துவங்கியுள்ளனர். எங்கள் கருத்துக்கள் அரசியல் மற்றும் சமூக களத்தில் அதிக மதிப்புடையதாக மாறியுள்ளது. பெரும்பாலான முஸ்லிம்கள் அரசியல் வாதிகளாக உள்ளனர். மேலும் அவர்கள் ஸ்பெயின் சமூகத்தில் ஒருவருக்கொருவர் உதவும் பொருட்டு நெட்வொர்க்கை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
உலகில் தற்போதைய முஸ்லிம்களின் ஜனத்தொகை 1.6 பில்லியனிலிருந்து(160 கோடி-23.4சதவீதம்) அடுத்த இருபது ஆண்டுகளில் அதாவது 2030 ஆம் ஆண்டில் 2.2 பில்லியன்(220 கோடி-26.4சதவீதம்) வளர்ச்சியடையும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
News source:presstv

1 கருத்துகள்: on "அடுத்த இருபது ஆண்டுகளில் ஸ்பெயினில் முஸ்லிம் மக்கள் தொகை 82 சதவீதம் அதிகரிக்கும்"
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள் ALLAHU AKBAR ALLAHU AKBAR ALLAHU AKBAR NazeerPPM
கருத்துரையிடுக