12 ஜன., 2011

மத அவமதிப்புச் சட்டத்தை திருத்தமாட்டோம்: பாக்.பிரதமர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்,ஜன.12:பாகிஸ்தானில் மத அவமதிப்புச் சட்டம் திருத்தப்படாது என பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி அறிவித்துள்ளார்.

மத அவமதிப்புச் சட்டத்தை திருத்துவதற்கு ஆதரவு தெரிவித்த பஞ்சாப் மாகாண கவர்னர் தஹ்ஸீர் அவருடைய மெய்க்காப்பாளரால் சில தினங்களுக்கு முன்பு கொல்லப்பட்டிருந்தார்.

நபி(ஸல்...) அவர்களை அவமதித்தல் உள்பட மத அவமதிப்புகளை மேற்கொள்வோருக்கு மரணத்தண்டனை விதிக்கும் சட்டத்தை திருத்த முடிவெடுக்கவில்லை என கிலானி இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பின் தலைவரான ஃபஸ்லுர் ரஹ்மானுடன் இதுத்தொடர்பாக விவாதித்ததாக கிலானி தெரிவித்தார்.

பாகிஸ்தானில் மத அவமதிப்புச் சட்டத்தை திருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கராச்சியில் பிரம்மாண்ட பேரணி நடைப்பெற்று சில மணி நேரங்களுக்குள்ளாகவே கிலானியின் பேட்டி வெளியானது.

நபி(ஸல்..) அவர்களின் புனிதத்தை மாசுப்படுத்தும் எந்தவொரு செயலையும் அங்கீகரிக்கமாட்டோம் என பேரணியில் கலந்துக்கொண்ட ஜமாஅத்துதஃவாவின் தலவைர் காரி அஹ்ஸன் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மத அவமதிப்புச் சட்டத்தை திருத்தமாட்டோம்: பாக்.பிரதமர் அறிவிப்பு"

கருத்துரையிடுக