குவஹாத்தி,ஜன.10:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பை சங்க்பரிவார் திட்டமிட்டு நிகழ்த்தியது என்ற ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலம், நீதிவிசாரணை நடைபெறும் பொழுது கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா தொடர்வதுக் குறித்து எவ்வித பதிலையும் கூற பா.ஜ.க தயாரில்லை.
குவஹாத்தியில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இவ்விவகாரங்கள் விவாதத்திற்கு கூட எடுக்கவில்லை என அக்கட்சியின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டத் தீர்மானங்கள் குறித்து விளக்கமளித்த பா.ஜ.கவின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், நேற்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார்.
உறவினர்களுக்கும்,ஆதரவாளர்களுக்கும் அரசு நிலத்தை விற்பனைச் செய்ததில் தொடர்பு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா நீதிவிசாரணையை எதிர்கொண்டுள்ளார். கட்சியின் இமேஜ் முக்கியமா? அல்லது எடியூரப்பாவா? என்ற கேள்விக்கு பதிலளித்த, நிர்மலா, கட்சி இதனைக் குறித்து கண்காணித்து வருவதாகவும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தெளிவுப்படுத்தியிருப்பதாக கூறினார்.
கட்சியின் இமேஜை பாதிக்கும் நடவடிக்கைகளில் தலைவர்களோ தொண்டர்களோ ஈடுபடக் கூடாது என நிதின் கட்காரி கூறியிருப்பது எடியூரப்பாவை குறித்தா? என்ற கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இது அவர் பொதுவாக தெரிவித்தது எனவும், எந்தவொரு தனிநபரையும் குறிப்பட்டது அல்ல என கூறி சமாளித்தார்.
நீதிமன்ற விசாரணையை சந்திக்கும் நபரை முதல்வர் பதவியில் தொடரச்செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தாதா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நிர்மலா, இதுக்குறித்து போதுமான தகவல்களை மாநில அரசே பத்திரிகைகளுக்கு வழங்கியுள்ளதாகவும், தற்பொழுது மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல் குறித்த பிரச்சாரத்தில் கட்சி கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார் அவர்.
அஸிமானந்தாவின் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலம் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதித்தீர்களா? என்ற கேள்விக்கு 'இல்லை' என பதிலளித்தார் அவர். ஆனால், பாகிஸ்தானில் உள்ள நபர்களுக்கு இக்குண்டுவெடிப்பில் தொடர்புள்ளது குறித்து மத்திய அரசு ஐ.நா சபையில் கூட தெரிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "எடியூரப்பா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு - பதில் கூறமுடியாமல் திணரும் பா.ஜ.க"
கருத்துரையிடுக