31 ஜன., 2011

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மாற்றினாலும் தள்ளுபடிச் செய்யவியலாது - உச்சநீதிமன்றம்

புதுடெல்லி,ஜன.31:பயங்கரவாத,நாசவேலை தடுப்புச் சட்டத்தின்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் விசாரணைக்கிடையே மாற்றினாலும் தள்ளுபடிச் செய்யவியலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சில வேளைகளில் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் பின்னர் மாற்றுவது உண்டு. ஆனால், இச்சட்டத்தின்படி சுயமாக வாக்குமூலம் அளித்த பிறகு அதனை வாபஸ்பெற்றாலும் முதலில் அளித்த வாக்குமூலம் சரியானதாகவே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

சுதந்திரமாகவும், சுயமாகவும் வழங்கும் முதல் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அதிக மதிப்பு வழங்கவேண்டுமென்பதில் சந்தேகமில்லை என நீதிபதிகளான பி.சதாசிவம், ஹெச்.எல்.தத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.

வாக்குமூலத்தை மாற்றுவது செய்த குற்றத்திலிருந்து தப்புவதற்கான முயற்சியாகவே கருதப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

கூடுதல் கஸ்டம்ஸ் கலெக்டர் எல்.டி.அரோராவை கொலைச்செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கிய கான்பூர் தடா நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிச்செய்து தீர்ப்பளிக்கும் வேளையில் இதனை உச்சநீதிமன்ற பெஞ்ச் தெரிவித்தது.

பப்லு என்றழைக்கப்படும் ஓம்பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, கெ.கெ.ஷைனி, மான்கே என்ற மஞ்சித்சிங் ஆகியோரின் தண்டனையைத்தான் உச்சநீதிமன்ற பெஞ்ச் உறுதிச் செய்தது.

இவ்வழக்கில் முக்கிய பங்கு பப்லு என்ற ஓம்பிரகாஷ் ஸ்ரீவஸ்தவாவினுடையது. ஆனால், இவ்வழக்கில் இவருக்கெதிரான ஆதாரம் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான வழக்குகளில் இது சூழ்நிலை ஆதாரமாக கருதப்படும்.

பப்லுவை குற்றவாளியாக்கியதற்கு ஆதாரம் உண்டா? என்பதை நீதிமன்றம் பரிசோதித்தது. பப்லுவிற்கு மரணத்தண்டனை வழங்க வேண்டுமெனக்கோரி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மாற்றினாலும் தள்ளுபடிச் செய்யவியலாது - உச்சநீதிமன்றம்"

கருத்துரையிடுக