வாஷிங்டன்,ஜன.19:லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரியின் கொலைவழக்குத் தொடர்பாக ஐ.நா தீர்ப்பாயம் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வரவேற்றுள்ளார்.
லெபனானில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற எண்ணம் முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
லெபனானில் அமைதியை ஏற்படுத்த அனைத்து பிரிவினரும் முயலவேண்டும் என ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வித தலையீடுகளும், மிரட்டல்களும் இல்லாமல் தீர்ப்பாயம் தனது பணியை தொடர அனுமதிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஐ.நா தீர்ப்பாயத்தின் குற்றப்பத்திரிகையின் உள்ளடக்கம் வெளியே வராவிட்டாலும், ரஃபீக் ஹரீரி கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதற்கு காரணம் ஹிஸ்புல்லாஹ்தான் என அக்குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "ஹரீரி கொலைவழக்கு:ஐ.நா தீர்ப்பாயத்தின் குற்றப்பத்திரிகைக்கு ஒபாமா வரவேற்பு"
கருத்துரையிடுக