25 ஜன., 2011

ரியாதில் கட்டிடப் பணி நடக்கும் இடத்தில் விபத்து: ஏராளமானோர் பலி

ரியாத்,ஜன.25:சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் பிரின்ஸஸ் நூரா பிந்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் கட்டிடப் பணி நடைப்பெற்றுக் கொண்டிருந்த இடத்தில் நடந்த விபத்தில் ஏராளமானோர் மரணித்ததாக செய்திகள் கூறுகின்றன.

பல்கலைக்கழகத்தின் நூலகத்தை புதுப்பிக்கும் விதமாக கட்டப்பட்ட இரும்பிலான சாரம்(scaffolding) கீழே விழுந்ததில் 35 பேர் மரணித்ததாக செய்திகள் கூறுகின்றன. 11 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால், 3 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிங் காலித் சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில்தான் இவ்விபத்து நடந்த கட்டிடம் அமைந்துள்ளது. சம்பவ நடந்த இடத்தை போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரெட் க்ரஸண்ட் ஆம்புலன்சுகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன. பிரின்ஸஸ் நூரா பிந்த் அப்துல்ரஹ்மான் பல்கலைக்கழகம் உலகிலேயே மிகப்பெரிய பெண்கள் பல்கலைக்கழகமாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ரியாதில் கட்டிடப் பணி நடக்கும் இடத்தில் விபத்து: ஏராளமானோர் பலி"

கருத்துரையிடுக