31 ஜன., 2011

புரட்சியாளர்களின் பிடியில் கெய்ரோ

கெய்ரோ,ஜன.31:எகிப்தில் சர்வாதிகார அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம் அதன் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

ஆட்சிமாற்றத்தை கோரி ஊரடங்கு உத்தரவை மீறியும்,பாதுகாப்புப் படையினருக்கு சவால் விட்டும் ஆறாவது நாளாக களமிறங்கிய எகிப்து நாட்டு மக்கள் கெய்ரோவின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.

ராணுவ உடையை களைந்துவிட்டு ராணுவ வீரர்களும் மக்களோடு போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த மோதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியுள்ளது. நான்காயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய வேளையிலும் மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.

சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் திரும்பமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

எகிப்து வன்முறைக்காடாக மாறியுள்ளது. போலீஸ் பாதுகாப்பு இல்லாததன் காரணத்தினால் வங்கிகளும், நகைக்கடைகளும், பெரும் வியாபார நிறுவனங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

போராட்டம் வலுவடைந்த பொழுதிலும் பதவியை விட்டு விலக விரும்பாத ஹுஸ்னி முபாரக் ராணுவத்தின் சக்தியை காண்பிப்பதற்கான முடிவில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கெய்ரோ நகரத்தில் ராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தாழ்வாக பறக்கின்றன. போர் டாங்குகள் அணி வகுத்துள்ளன. ஆனால் இதுவரை தாக்குதல் துவங்கவில்லை.

நாட்டின் பல்வேறு சிறைகளை போராட்டக்காரர்கள் தகர்த்தனர். வாதினா ட்ரவுன் சிறையில் சிறை அதிகாரிகள் வேலையை ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தைச் சார்ந்த 34 தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கெய்ரோவில் மூத்த போலீஸ் அதிகாரியை கொலைச் செய்துவிட்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிறையிலிருந்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான நீதிபதிகள் போராட்டகாரர்களுடன் இணைந்துள்ளனர்.

முபாரக் பதவி விலகவேண்டுமென நோபல் பரிசுப்பெற்ற முஹம்மது அல்பராதி வலியுறுத்தியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புரட்சியாளர்களின் பிடியில் கெய்ரோ"

கருத்துரையிடுக