1 ஜன., 2011

தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கே.பாலகிருஷ்ணன் உடனடியாக ராஜினாமாச் செய்யவேண்டும் - எஸ்.டி.பி.ஐ

போபால்,ஜன.1:சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவரான இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர் பதவியில் நீடிக்க நீதிபதி கே.பாலகிருஷ்ணனுக்கு தார்மீக உரிமை இல்லை. ஆகவே, அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமாச் செய்வதுடன், தனது குடும்பத்தினருக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தபொழுது சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை வாங்கு குவித்தது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுத் தொடர்பாக பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ள எஸ்.டி.பி.ஐயின் தலைவர் இ.அபூபக்கர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
நீதிபதி கே.பாலகிருஷ்ணனின் மருமகனான ஸ்ரீனிஜன் மீது மட்டும் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. மாறாக, அவரது மனைவி, சகோதரர், மகள் ஆகியோரும் சந்தேகத்தின் நிழலில் உள்ளனர்.

கே.பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த வேளையில், இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய ஊழலுக்கு சொந்தக்காரரான முன்னாள் அமைச்சர் அ.ராசாவுக்கு எதிரான புகாரை வேண்டுமென்றே நிராகரித்துள்ளார்.

நீதிபதி கே.பாலகிருஷ்ணன் ஏற்கனவே தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர் பொறுப்பை வகிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார். காரணம், 2002 குஜராத் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி தன் மீதான குற்றச்சாட்டிற்கு சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரணையை எதிர்கொண்ட மறுதினம் அவருடன் மேடையை பகிர்ந்துக் கொண்டவர் நீதிபதி கே.பாலகிருஷ்ணன்.

ஏற்கனவே குஜராத் இனப் படுகொலைக்கு பலியானவர்களின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலி என்கவுண்டர் கொலைகளை நடத்திய போலீசாருக்கு ஆதரவாக இவர் தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவராக பதவியிலிருக்கும் பொழுதே தெரிவித்த கருத்துக்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் மத்தியில் பெருங்கவலையை
ஏற்படுத்தியுள்ளது.

கே.பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமாச் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மத்திய அரசு அவரை இப்பதவியிலிருந்து அகற்றவேண்டும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கே.பாலகிருஷ்ணன் உடனடியாக ராஜினாமாச் செய்யவேண்டும் - எஸ்.டி.பி.ஐ"

கருத்துரையிடுக