21 ஜன., 2011

வளைகுடா நாடுகளுக்கான ஏர் இந்தியா சேவை மேம்படுத்தப்படும் - வயலார் ரவி

புதுடெல்லி,ஜன.21:ஏர்இந்தியாவின் வளைகுடா நாடுகளுக்கான சேவை மேம்படுத்தப்படும் என புதிதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்ற வயலார் ரவி தெரிவித்துள்ளார்.

ஏர்இந்தியாவைக் குறித்த வளைகுடாவாழ் இந்தியர்களின் புகார்களுக்கு பரிகாரம் காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

தொலைவு அடிப்படையில் ஏர் இந்தியாவின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற வளைகுடா வாழ் தென்னக இந்தியர்களின் கோரிக்கையை ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கப்படும்.

நேற்று மதியம் ஒரு மணிக்கு விமானப் போக்குவரத்துறை அமைச்சகத்திற்கான பொறுப்பை வயலார் ரவி ஏற்றுக்கொண்டார். நண்பரான பிரபுல் பட்டேலிடமிருந்து இப்பதவியை ஏற்றுக்கொள்வதில் சந்தோஷமடைவதாக வயலார் ரவி தெரிவித்தார்.

இனி வரும் ஆண்டுகள் மறக்கமுடியாத அனுபவங்களை விமானப் போக்குவரத்துறையில் அளிக்கவேண்டுமென பிரபுல் பட்டேல் வயலார் ரவியிடம் கேட்டுக்கொண்டார். ஏர் இந்தியா விமான நிறுவனம் லாபகரமாக செயல்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்த வயலார் ரவி இதற்காக தொழிலாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையிலான பணிகளை புரிவோம் என தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வளைகுடா நாடுகளுக்கான ஏர் இந்தியா சேவை மேம்படுத்தப்படும் - வயலார் ரவி"

கருத்துரையிடுக