17 ஜன., 2011

மொஸாத் ஏஜண்டுக்கு எதிராக ஜெர்மனி மீண்டும் கைது வாரண்ட்

பெர்லின்,ஜன.17:ஹமாஸ் கமாண்டர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஸாத் ஏஜண்டிற்கு எதிராக ஜெர்மனி மீண்டும் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் குடிமகனான யூரி ப்ரோட்ஸ்கியை கைதுச் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதை ஜெர்மனியின் பிரபல பத்திரிகையான டெர் ஸ்பீகல் செய்தி வெளியிட்டுள்ளது.

ப்ரோட்ஸிகியின் மீதான புதிய குற்றங்கள் என்ன? என்பது குறித்து அப்பத்திரிகை தெரிவிக்கவில்லை.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி துபாயில் ஒரு ஹோட்டலில் வைத்து ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மப்ஹூஹ் மொஸாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டார். பல்வேறு நாடுகளின் போலி பாஸ்போர்ட்டுகளில் வந்த மொஸாத் ஏஜண்டுகள் இந்த குற்றத்தை நிகழ்த்தியதாக துபாய் போலீஸ் கண்டறிந்தது.

மப்ஹூஹை கொலைச் செய்த கொலையாளிகளில் ஒருவரான போடன்ஹெய்மருக்கு போலி ஜெர்மனி பாஸ்போர்ட்டை ஏற்பாடுச் செய்துக் கொடுத்ததாக ப்ரோட்ஸ்கி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜெர்மனி வெளியிட்ட கைது வாரண்டை தொடர்ந்து வார்ஸா விமானநிலையத்தில் வைத்து ப்ராட்ஸ்கி கைதுச் செய்யப்பட்டார். பின்னர் ஜெர்மனியிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். ஜெர்மனியில் 24 மணிநேரமும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப்ராட்ஸ்கி 2010 ஆகஸ்டில் ஒரு லட்சம் யூரோ ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார். பின்னர் அவர் 60 ஆயிரம் யூரோ அபராதம் செலுத்தி போலி பாஸ்போர்ட் தயாரித்த குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டு குற்றப்பத்திரிகையில் அவருடைய பெயர் நீக்கப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மொஸாத் ஏஜண்டுக்கு எதிராக ஜெர்மனி மீண்டும் கைது வாரண்ட்"

கருத்துரையிடுக