பெங்களூர்,ஜன.25:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுமீதான விசாரணையை கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் மீண்டும் அடுத்த மாதம் எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
எதிர்வாதம் ஃபயல்(File) செய்ய அரசுத் தரப்பு கால அவகாசம் கேட்டதால் இவ்விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் நான்காவது முறையாக விசாரணை ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஜாமீன் மனுவை பரீசிலனைக்கு எடுத்தபொழுது மஃதனியின் முன் ஜாமீன் மனுவில் வாதம் கேட்ட நீதிபதிதான் ஜாமீன் மனுமீதான விசாரணையையும் நடத்தவேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ஹெச்.எஸ்.சந்திரமெளலி வாதிட்டார். ஆனால், இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என மஃதனியின் வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியாவின் வாதத்தை அங்கீகரித்த நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவில் வாதம் கேட்ட நீதிபதிதான் ஜாமீன் மனுவின் விசாரணையின்போதும் வாதம் கேட்கவேண்டும் என்ற அரசுதரப்பு வாதத்தை தள்ளுபடிச் செய்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு"
கருத்துரையிடுக