20 ஜன., 2011

பின் அலியின் கட்சியை கலைக்க துனீசிய எதிர்கட்சியினர் கோரிக்கை

துனீஸ்,ஜன.20:முன்னாள் அதிபர் ஜைனுல் ஆபீதின் பின் அலியின் கட்சியை கலைக்க வேண்டுமென துனீசியாவின் முக்கிய எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய அரசிலிருந்து அமைச்சர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

டெமோக்ரேடிக் ஃபார் லேபர் அண்ட் யூனிட்டியின் அழைப்பை ஏற்று தலைநகரான துனீஸில் மக்கள் திரள ஆரம்பித்துள்ளனர். மக்கள் புரட்சியின் காரணமாக துனிசீய அதிபர் பின் அலி நாட்டைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து பிரதமர் முஹம்மது கன்னோசி ஐக்கிய அரசை உருவாக்கியிருந்தார். ஆனால் பின் அலியின் கட்சியில் பலரும் அமைச்சராக நீடித்ததை எதிர்த்து அடுத்த நாளே எஃப்.டி.எல்.டி தங்களின் மூன்று அமைச்சர்களை வாபஸ்பெற்றது.

ஆனால்,இத்தகையதொரு நெருக்கடியான காலக்கட்டத்தில் அரசு கவனத்தோடு செயல்படவேண்டும் எனவும், இதற்கு எதிர்கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை என்பது கன்னோசியின் நிலைப்பாடு.

கருத்து வேறுபாட்டை பரிசீலிக்க 40 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவைக் கூட்டத்திற்கு கன்னோசி அழைப்பு விடுத்துள்ளார். எதிர்கட்சியினரின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை கன்னோசி ஏற்றுக்கொள்வார் என கருதப்படுகிறது.

இதற்கிடையே எதிர்கட்சியினரை ஒன்றிணைக்க பிரதமர் கன்னோசியும், இடைக்கால அதிபர் ஃபுஆத் முபஸ்ஸமும் பின் அலியின் கட்சியான கான்ஸ்ட்யூசனல் டெமோக்ரேடிக் ராலியிலிருந்து (ஆர்.சி.டி) ராஜினாமா செய்துள்ளனர். ஆனால், மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு பின் அலி கட்சியின் அனைத்து அமைச்சர்களையும் வெளியேற்றவேண்டும் என எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பின் அலியின் கட்சியை கலைக்க துனீசிய எதிர்கட்சியினர் கோரிக்கை"

கருத்துரையிடுக