5 ஜன., 2011

காஸ்ஸாவிற்கு உதவிப் பொருட்களுடன் செல்லும் ஆசிய கப்பலை பின்தொடரும் இஸ்ரேலிய போர் கப்பல்கள்

புதுடெல்லி,ஜன:.5காஸ்ஸாவிற்கு உதவிப்பொருட்கள் ஏற்றிச்சென்ற ஆசிய கப்பலை இரண்டு இஸ்ரேலிய போர் கப்பல்கள் பின்தொடருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உதவிக் கப்பலின் பாதுகாப்புப் பணியில் இருக்கும் கவுஹர் இக்பால், ஆசிய உதவிக் கப்பலை ஓரு இஸ்ரேலிய போர் கப்பலும ஓரு ஹெலிகாப்டரும் பின் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறுகிறார்.

இந்த கப்பல் மீது இஸ்ரேலின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்ப்பார்ப்பை தூண்டுகிறது.

மனிதநேய அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான், பஹ்ரைன், அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு மதத்தைச் சேர்ந்த 130 நபர்களுடன் மருத்துவம், மறறும் உதவிப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு ஆசியாவின் முதல் உதவிக் கப்பல் ஃபலஸ்தீனின் முற்றுகையிடப்பட்ட காஸ்ஸா பகுதிக்கு கடந்த டிசம்பர் 2ஆம் தேதி புதுடெல்லியிலிருந்து புறப்பட்டது.

இந்திய குழுவில் , மாணவர் அமைப்பு , உள்நாட்டு அமைப்புகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் என பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 50.நபர்கள் இடம்பெற்றிருந்தனர்.

கடந்த ஆண்டு காஸ்ஸாவிற்கு உதவிப் பொருள் ஏற்றிச் சென்ற ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா இஸ்ரேலிய படையால் தாக்கப்பட்டு அதில் இருந்த 20 பேர் உயிரிழந்தனர் என்பதும், புகழ்பெற்ற மனித உரிமை மற்றும் சமூக சேவகருமான யுவான் ரிட்லி இந்த முற்றுகை முடிவுக்கு கொண்டுவர வேண்டி காஸ்ஸாவிற்குள் நுழைய முயன்ற போது எகிப்து அரசால் கடுமையாக நடத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஸ்ஸாவிற்கு உதவிப் பொருட்களுடன் செல்லும் ஆசிய கப்பலை பின்தொடரும் இஸ்ரேலிய போர் கப்பல்கள்"

கருத்துரையிடுக