8 ஜன., 2011

தூங்கிக் கொண்டிருந்த ஃபலஸ்தீனியை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய ராணுவம்

ராமல்லா,ஜன.8:ஃபலஸ்தீன் மேற்குகரை ஹெப்ரானில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஃபலஸ்தீனியை இஸ்ரேலிய ராணுவம் அநியாயமாக சுட்டுக் கொன்றுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் அதிகாலையில் நடத்திய ரெய்டிற்கு பின்னர் 55 வயதான உமர் அல் கவாஸ்மி இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார்.

ஆறு ஹமாஸ் உறுப்பினர்களை ஃபலஸ்தீன் சிறையிலிருந்து விடுவித்து 24 மணிநேரத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் ஏராளமான ஃபலஸ்தீன் வீடுகளில் அத்துமீறி நுழைந்து ரெய்டை நடத்தியது.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஐந்துபேர் ஹெப்ரானைச் சார்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான வாஅல் ஃபிதாரை கொல்லப்பட்ட நபரின் வீட்டின் கீழ் பகுதியிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் கைதுச் செய்தது.

"இஸ்ரேலிய ராணுவத்தினர் வீட்டிற்கு அத்துமீறி நுழையும் வேளையில் நான் ஃபஜ்ர் தொழுதுக் கொண்டிருந்தேன். எவ்வாறு அவர்கள் வீட்டின் கதவை திறந்தார்கள் எனத் தெரியாது. ஒரு இஸ்ரேலிய ராணுவவீரன் எனது வாயைப் பொத்தியவாறு ரிவால்வரை தலையில் வைத்து பேசாதே எனத் தெரிவித்தான்" என கவாஸ்மியின் மனைவி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கவாஸ்மி அருகிலிருந்து பலமுறை தலையிலும், நெஞ்சிலும் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் முன்பே அவர் இறந்துவிட்டார் என அல்ஜஸீரா கூறுகிறது.

கவாஸ்மி கொல்லப்பட்டவுடன் இவர் அல்ஃபிதாரா என ஒரு இஸ்ரேலிய ராணுவன் வினவியதாக அவருடைய மகன் கூறுகிறான். இல்லை என கூறியவுடன் கீழே உள்ள ஃபிதாரின் அபார்ட்மெண்டிற்கு சென்று அவரை கைதுச் செய்தனர்.

கவாஸ்மியின் கொலையை நியாயப்படுத்த முடியாது எனவும், இது ஃபலஸ்தீன் அரசுக்கெதிரான நடவடிக்கை எனவும் ஃபலஸ்தீன் அதாரிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஃபிதாருடன் கடந்த வியாழக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இதர நான்கு ஹமாஸ் உறுப்பினர்களையும் இஸ்ரேல் கைதுச் செய்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தூங்கிக் கொண்டிருந்த ஃபலஸ்தீனியை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய ராணுவம்"

கருத்துரையிடுக