5 ஜன., 2011

சூடான்:விருப்ப வாக்கெடுப்பு முடிவை ஏற்பேன் என உமருல் பஷீர் அறிவிப்பு

கார்தூம்,ஜன.5:ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் விருப்ப வாக்கெடுப்பில் தெற்கு சூடானில் மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தால் அதனை ஏற்றுக்கொள்வதாக சூடான் அதிபர் உமருல் பஷீர் அறிவித்துள்ளார்.

தெற்கு சூடானின் தலைநகரான ஜுபயில் வைத்து அதிகாரிகளிடம் பேசினார் அவர். வடக்கு சூடான் ஐக்கியத்திற்காக முயற்சித்தாலும், பிரிவினை ஏற்படுத்துவதற்கான உரிமை தெற்கு சூடானிற்கு உண்டு என பஷீர் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளாக பிரிந்தாலும் பரஸ்பர உறவு தொடரும். 2005 ஆம் ஆண்டில் சூடான் அரசும், தெற்கு சூடானில் அதிருப்தி அமைப்பான சூடான் பீப்பிள்ஸ் லிபரேசன் மூவ்மெண்டிற்குமிடையே கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தத்தில் குறைபாடுகளிருந்தாலும் வெற்றிகரமானது.

ஐக்கியம் என்பது சக்தியை பிரயோகித்து ஏற்படுத்தக்கூடியது அல்ல என்பதால் விருப்ப வாக்கெடுப்பிற்கு ஒப்புக்கொண்டதாக பஷீர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சூடான்:விருப்ப வாக்கெடுப்பு முடிவை ஏற்பேன் என உமருல் பஷீர் அறிவிப்பு"

கருத்துரையிடுக