31 ஜன., 2011

ஊழலுக்கெதிராக காந்தியாவாதிகளின் உண்ணாவிரப் போராட்டம் துவங்கியது

புதுடெல்லி,ஜன.31:இந்தியாவில் தீவிரமடைந்துள்ள ஊழல்களுக்கெதிராக பயனளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி மூத்த காந்தியவாதிகள் டெல்லியில் காலவரையற்ற சத்தியாகிரகப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். காந்திஜியின் 63-வது நினைவு நாளான நேற்று ஜந்தர் மந்தரில் இந்தியாவின் பல பகுதிகளைச் சார்ந்த காந்தியவாதிகள் 7 பேர் இந்த போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

ஊழலுக்கெதிராக மத்திய அரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனக்கூறி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு துவங்கிய போராட்ட நிகழ்ச்சியின் இரண்டாவது கட்டம்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம்.

முன்னர் ஊழல் புகார்களைக் குறித்து விசாரிக்க கமிஷனை நியக்கவேண்டும், குற்ற பின்னணியைக் கொண்ட வேட்பாளர்கள் தகுதியிழக்கச் செய்தல், பொது சேவையில் ஈடுபடுபவர்கள் அநியாயமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்தல் ஆகிய கோரிக்கைகளை காந்தியவாதிகள் முன்வைத்தனர்.

இக்கோரிக்கைகளில் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்குவதாக 93 வயதான ஷம்பு தத்தா கூறுகிறார்.

முரளிலால் குப்தா(வயது 90), ஆர்.எஸ்.தேவி(வயது 84), கோவிந்த் நாராயணன் சேத்(வயது 78), அமர்நாத் கன்னா(வயது 89), கெ.பி.ஸாஹூ ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கும் காந்தியவாதிகளாவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஊழலுக்கெதிராக காந்தியாவாதிகளின் உண்ணாவிரப் போராட்டம் துவங்கியது"

கருத்துரையிடுக