தெஹ்ரான்,ஜன.16:ஈரானின் அணுசக்தி நிலையங்களை பார்வையிட சர்வதேச அணுசக்தி முகமையின் பிரதிநிதிகள் ஈரானுக்கு வருகைப் புரிந்துள்ளனர்.
நாம்(NAM),அரபுலீக் போன்ற அமைப்புகளீன் பிரதிநிதிகளும், வெனிசுலா, கியூபா, ஒமான்,எகிப்து,அல்ஜீரியா,சிரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் அடங்குவர்.
நதான்ஸில் யுரேனியம் செறிவூட்டப்படும் மையத்தையும், அராக்கில் தண்ணீர் ரியாக்டரையும் இப்பிரதிநிதிகள் குழு பார்வையிடும் என சர்வதேச அணுசக்தி முகமையின் ஈரான் தூதர் அலி அஸ்கர் சுல்த்தானி தெரிவித்தார்.
சீனாவும், ரஷ்யாவும் தங்களது பிரதிநிதிகளை ஈரானுக்கு அனுப்பமாட்டோம் என அறிவித்துள்ளன. ஐரோப்பிய யூனியன் ஈரானின் அழைப்பை மறுத்துவிட்டது. அமெரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் குறித்த தெளிவான நிலையை உறுதிச் செய்வதற்காக சர்வதேச அணுசக்தி முகமையின் பிரதிநிதிகளை தங்களுடைய அணுசக்தி மையங்களை பார்வையிட அனுமதியளித்துள்ளதாக சுல்த்தானி தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ளும் அதேவேளையில், எங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈரான் அணுசக்தி நிலையங்களை பார்வையிட வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை"
கருத்துரையிடுக